பக்கம்:வழிப்போக்கன்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

“தங்களை என்னால் மறக்கவே முடியவில்லை...”

“என்னை மறந்துவிட்டுத்தானே வேறொருவனை மணந்து கொண்டாய்?”

இந்த வார்த்தைகள் அவள் இதயத்தில் சுருக்கெனப் பாய்ந்தன.

“சுந்தர்! உங்கள் வார்த்தைகளால் என் இதயத்தைத் தாக்காதீர்கள். அதைக் காட்டிலும் உங்கள் கைகளால் என்னைக் கொன்றுவிடுங்கள். மகிழ்ச்சியோடு, மன நிம்மதியோடு செத்துப் போகிறேன்...தாத்தாவின் விருப்பத்துக்கு மாறாக நான் என்ன செய்ய முடியும்? இப்போது அவர் எவ்வளவு வருத்தப்படுகிறார் தெரியுமா? ஜூரமாகப் படுத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்கூட அவர் உங்கள்பெயரைச் சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறார்... ஜாதகத்தை நம்பி மோசம் போய்விட்டேனே; சுந்தரை ஏமாற்றி விட்டேனே' என்று சொல்லிச் சொல்லி துக்கப்படுகிறார். ஜாதகப்படி உங்களுக்கு ஆயுள் குறைவு என்று நம்பிக்கொண்டு என்னை வேறொருவருக்குக்குக் கொடுத்தார். தாத்தா விதியை மாற்றி அமைக்க முடிவு செய்தார். ஆனால் விதி அவரை ஏமாற்றி விட்டது! நீண்டகாலம் வாழ்வார் என்று நம்பிய ஒருவருக்கு என்னைக் கொடுத்து என் வாழ்வை இன்பமயமாக்க எண்ணினார் அவர். ஜாதகம் பொய்த்துவிட்டது. என் கணவர் என்னை அநாதையாக்கி விட்டுப் போய்விட்டார். என் வாழ்வு துன்பமயமாகிவிட்டது. விதி இப்போது உங்கள் உருவத்தில் என்னையும் தாத்தாவையும் கண்டு கெக்கலிறது.” சகுந்தலாவின் கண்களில் நீர்த் திரையிட்டது.

சுந்தரம் மவுனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.

மீண்டும் அறைக்குள் பாய்ந்து வந்த குளிர் காற்று அவர்கள் இருவரையும் தழுவிக்கொண்டு சென்றது. காற்றின் வேகத்தில் ஜன்னல் கதவுகள் பட படவென்று ஆடின.

சகுந்தலாவின் நிலை கண்டு சுந்தரின் உள்ளம் வேதனைப்பட்டது. இளம் வயதில் அவளுக்கு நேர்ந்துவிட்ட சோதனையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/108&oldid=1322853" இலிருந்து மீள்விக்கப்பட்டது