பக்கம்:வழிப்போக்கன்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

109


நினைத்து அவன் வருந்தினான். 'மொட்டும் மலருமாக இருக்கும் பருவத்திலேயே அவள் கணவனை இழந்து வாழ்வின் இன்பத்தைப் பருகக் கொடுத்து வைக்காத கைம்பெண்ணாகி,விட்டாளே' என்று பரிதாபப்பட்டான்.

மலருக்கு இன்பம் தர, அதன் நறுமணத்தை நுகர, அதன் தேன் சுவையைப் பருக வந்த வண்டைச் சூறாவளிக்காற்று கொண்டு போய்விட்டது. மலர்ந்தும் மலராமலும் உள்ள மொட்டு கசங்கிக் கீழே விழுந்து கிடக்கிறது. சகுந்தலாவின் நிலை அவனுக்கு அப்படித்தான் பட்டது.

சுந்தரத்தையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு நின்றாள் சகுந்தலா அவள் வாய் திறந்து பேச முடியாத வார்த்தைகளையெல்லாம் அவள் விழிகள் சொல்லிக் கொண்டிருந்தன.

இச்சமயம் மல்லீயப்ப!... என்று கூவிக்கொண்டே வந்த கிழவி ஒருத்தி சகுந்தலாவின் அறைக்குள் எட்டிப்பார்த்தாள். சகுந்தலாவைப் பார்த்து, "மல்லியப்பூ வேணுமாம்மா? நல்ல வாசனையாயிருக்குது..." என்று கேட்டாள் அக்கிழவி.

சகுந்தலா பதில் கூறாமல் தன்னுடைய சோகம் தோய்ந்த விழிகளால் அவளைத் திரும்பிப் பார்த்தாள். அந்தக் கிழவி சகுந்தலாவின் தோற்றத்தைப் பார்த்துப் புரிந்து கொண்டவள்போல் "பாவம்! இளம் வயசு பொண்ணு...ம்..." என்று கூறிக்கொண்டே போய்விட்டாள்.

13

எங்கேயோ வானத்தில் மேகங்கள் கிடுகிடு வென்று குமுறிக் கொண்டிருந்தன. மழை வரப்போவதற்கு அறிகுறியாக அந்த அறையிலுள்ள விளக்கைச் சுற்றிலும் ஈசல்களும் விட்டில்களும் சூழ்ந்து வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

சுந்தரம் எழுந்துபோய் விளக்கை அணைத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/109&oldid=1321983" இலிருந்து மீள்விக்கப்பட்டது