பக்கம்:வழிப்போக்கன்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

"ஏன் விளக்கை அணைக்கிறீர்கள்?" சகுந்தலா கேட்டாள்.

"விளக்கின் ஒளியிலே மடியப்போகும் விட்டில் பூச்சிகளைச் சாகாமல் தடுப்பதற்குத்தான்..." என்று மறை பொருளாக அவளுக்கு எதையோ உணர்த்தினான் அவன்.

"எனக்கு இருட்டென்றால் ரொம்பப் பயம் என்று உங்களுக்குத் தெரியாதா?" என்று கேட்டாள் சகுந்தலா.

"தெரியும் வராந்தாவில் உள்ள விளக்கு வெளிச்சமே போதுமென்று பார்த்தேன்" என்றான் அவன்.

அடுத்தகணம் சகுந்தலாவின் கண்ணிமைகள் நனைந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்ட சுந்தரம், "ஏன் அழுகிறாய் சகுந்தலா?..." என்று கேட்டான்.

"என் சாந்தி முகூர்த்தத்தன்று படுக்கை அறையில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்கு திடுமென அணைந்து விட்டது. இப்போது அது நினைவுக்கு வந்தது. எதிர்காலத்தில் நேரப்போகும் பயங்கரத்தை முன்கூட்டியே அறிவிப்பது போல் இருந்தது அது" என் றாள் சகுந்தலா.

"அப்படியா! அப்புறம் என்ன நடந்தது?" என்று கேட்டான் சுந்தரம். சுந்தரம் அவளை விட்டுப் பிரிந்து வந்த பிறகு நடந்தவற்றையெல்லாம் விவரமாகக் கூறினாள் அவள். "கடைசியாக நான் கொடுத்து வைக்காத பாவியாகிவிட்டேன், சுந்தர்!’ என்று கண்ணிர் வடித்தாள். அவளுடைய துயரம் நிறைந்த கதையைக் கேட்டு சுந்தரம் வருத்தத்தில் ஆழ்ந்தான்.

"பாவம், நீங்கள் எங்கெங்கே அலைந்துவிட்டுக் களைத்து வந்திருக்கிறீர்கள். கீழே போய் ஐ. ஆர். ரூமிலிருந்து சாப்பாடு கொண்டு வருகிறேன். சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொள்ளுங்கள்" என்றாள்சகுந்தலா.

" வேண்டாம், நானே போய்க் கொண்டு வருகிறேன்" என்று கூறினான் சுந்தரம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/110&oldid=1313632" இலிருந்து மீள்விக்கப்பட்டது