பக்கம்:வழிப்போக்கன்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111

"ஏன், நான் கொண்டுவந்தால் சாப்பிடமாட்டீர்களா? என்றாள் அவள்.

"சரி சரி, உன் இஷ்டப்படியே செய். கோபித்துக் கொள்ளாதே. உனக்குத் தொந்தரவு எதற்கு என்று பார்த்தேன்."

"தங்களுக்கு நான் எவ்வளவோ கடமைப்பட்டிருக்கிறேன்" என்றாள் சகுந்தலா,

"நகைகளை கொண்டு வந்ததற்காகவா சொல்கிறாய்? சர்மா எனக்குச் செய்துள்ள உதவிகளுக்கு இதெல்லாம் எம்மாத்திரம் ஆனால் பாவம், அந்தக் குறவனுடைய குடும்பத்தை நினைத்துக் கொண்டால்தான் வருத்தமாயிருக்கிறது. அவன் மனைவியும் குழந்தையும் ரொம்பத் திண்டா டிக்கொண்டு இருப்பார்கள். அவன் குடும்பத்தைக் காப்பாற்றுவதாகக் குறவனிடம் வாக்குறுதி அளித்துவிட்டு வந்திருக்கிறேன்."

"கவலைப்படாதீர்கள் சுந்தர்! அந்தக் குறவனுடைய குடும்பத்தைக் காப்பாற்றுவது நம்முடைய கடமை. அந்தப் பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன். முதலில் அவர்கள் இருக்கும் இடத்தைத் தேடி கண்டு பிடியுங்கள்" என்றாள் சகுந்தலா.

"காமுவையும், சர்மாவையும் பார்த்துவிட்டு வந்த பிறகு என்னுடைய முதல் வேலை அதுதான்' என்றான் சுந்தரம்.

"எனக்குக்கூட காமுவைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. பாவம் அவளைப் பற்றி எண்ணும்போதே மனம் வேதனைப்படுகின்றது..." என்றாள் சகுந்தலா.

"காரியரை எடுத்துக் கொடு. நான் சாப்பாடு கொண்டு வருகிறேன்."

அவள் காரியருடன் பத்து ரூபாய் நோட்டையும் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.

"என்னிடம் பணம் இருக்கிறது". என்றான் சுந்தரம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/111&oldid=1313633" இலிருந்து மீள்விக்கப்பட்டது