பக்கம்:வழிப்போக்கன்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



14


ரயில் பெருந்துறை ஸ்டேஷனில் போய் நிற்கும்போது மணி இரண்டு. ரயிலை விட்டு இறங்கிய சுந்தரம் எதிரில் வந்தவர்களை வழி விசாரித்துக் கொண்டே நேராக ஆஸ்பத்திரியை நோக்கி நடந்தான். அதை நெருங்க நெருங்க அவன் உள்ளத்திலே ஒரு பரபரப்பு உண்டாயிற்று. காமுவைக் காணப் போகிறோம் என்பதில் அளவில்லாத மகிழ்ச்சியும் அவள் எப்படி உருக்குலைந்து தேய்ந்து போயிருக்கிறாளோ என்பதை நினைத்தபோது வருத்தமும் ஏற்பட்டன.

ஆஸ்பத்திரிக்குள் சென்று வலது பக்கமாகத் திரும்பி நடந்தான்.

'காமு எந்த வார்டில் படுத்திருக்கிறாளோ?'

சுற்று முற்றும் பார்த்துக்கொண்டே போனான்.

எதிரில் அன்ன நடைபோட்டு வந்துகொண்டிருந்த நர்ஸ் ஒருத்தி சுந்தரின் கவனத்தைக் கவர்ந்தாள். கேரள நாட்டைச் சேர்ந்தவள் என்பது அவள் முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது. அவளுடைய பொன்மேனியையும் புன்சிரிப்புத் தவழும் முகத்தையும் கண்டபோது சுந்தரம் வியந்தான். ஆண்டவன் படைப்பில் இத்தனை அழகும் உண்டோ?

அவன் நெருங்கி வந்தபோது, "காமு என்ற பெயருடையவள் எந்த வார்டில் இருக்கிறாள் என்று சொல்ல முடியுமா?" எள்று விநயமாகக் கேட்டான் சுந்தரம்.

"அங்கே விசாரியுங்கள்" என்று ஓரிடத்தைச் சுட்டிக் காட்டினாள் அவள். இனிமையும் அன்பும் தேனில் குழைந்து அவள் குரலாக ஒலித்ததோ!...

அவன் சுட்டிக் காட்டிய இடத்துக்குச் சென்றபோது சுந்தரின் மாமனாரே அங்கு நின்றுகொண்டிருந்தார் திடுமெனச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/117&oldid=1321944" இலிருந்து மீள்விக்கப்பட்டது