பக்கம்:வழிப்போக்கன்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

சற்றும் எதிர்பாராத நேரத்தில் சுந்தரைக் கண்டதும் அவருக்கு ஒன்றும் தோன்றவில்லை. அழுதுவிட்டார்.

"காமு எங்கே? அவள் எப்படி இருக்கிறாள்?" பலபல வென்று பொங்கி வந்த கண்ணிரை அடக்கியபடியே ஆவலுடன் விசாரித்தான் சுந்தர்.

"அதோ அந்த வார்டில் படுத்திருக்கிறாள். அவளுக்கு எந்நேரமும் உன் நினைவுதான் துரும்பாக இளைத்துப் போயிருக்கிறாள். இருமல் அவளை அணு அணுவாக் கொன்று கொண்டிருக்கிறது. அவளோ உன்னைப் பார்ப்பதற்காகவே உயிரை வைத்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறாள்: வா, போய்ப் பார்க்கலாம்." சுந்தரம் பறந்து சென்றான்.

காமு கண்களை மூடிப் படுத்திருந்தாள்.

"காமு!"அவள் கைகளைப்பற்றி அன்போடு எழுப்பினான் சுந்தரம். உணர்ச்சி அவன் நெஞ்சை அடைத்துக்கொண்டது கண் திறந்து பார்த்த காமுவுக்கு ஒரு கணம் இதயமே நின்றே விட்டது.

"நீங்களா ! ... எப்போது வந்தீர்கள்?" அதற்குமேல் அவளால் பேச முடியவில்லை. கண்களில் இருந்து கிற் றாகப் பெருகி ஓடியது கண்ணிர்.

"என்னிடம் சொல்லாமல் சிறைக்குப் போய்விட்டீர்களே என் உடம்பைப் பாருங்கள்... இந்த வியாதி என்னைக் கொண்டு போய்விடும் போலிருக்கிறது."

"அழாதே காமு இதோ நான் வந்துவிட்டேன். இனி கவலையில்லை.”

"இனி எனக்கு இந்த உயிரில் அக்கறை இல்லை. உங்களைப் பார்த்து விட்டேன் அல்லவா? அது போதும் எனக்கு. நான் உங்களை இனி எங்கும் போகவிடமாட்டேன். ஆமாம்; விடவே மாட்டேன்". அவன் கைகளை அழுத்தமாகப் பற்றிக்கொண்டவள் "ஐயோ! இதென்ன உங்கள் கையில் தழும்பா?" என்று பதறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/118&oldid=1313644" இலிருந்து மீள்விக்கப்பட்டது