பக்கம்:வழிப்போக்கன்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119

"சிறையில் என்ன அடித்துவிட்டார்கள் காமு தலையிலே கூட நல்ல அடி. இதோ பார் மண்டையிலே தையல் போட்ட இடத்தை! நான் உயிர் தப்பியதே ஆண்டவன் செயல்!" அதைக் கேட்டபோது, அதிர்ச்சி தாங்காமல் காமு கண்களை மூடிக்கொண்டாள்.

தன் கழுத்திலிருந்த மாங்கல்யத்தை எடுத்துக் கண்க ளிலே ஒற்றிக் கொண்டு,"தேவி! நான் பாக்கியம் செய்தவள் என்றாள், சுந்தருக்கு சட்டென சகுந்தலாவின் நினைவு வந்து விடவே, "உனக்குத் தெரியுமா? சகுந்தலாவின் புருஷன் இறந்துவிட்டனாம். பாவம்! சர்மாவுக்கு வேறு டைபாய்டு ஜுரம்,வேலூர் ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறார்" என்றான்.

" அப்படியா? சகுந்தலாவின் கதி இப்படியா ஆகவேண்டும் உங்களுக்கு யார் சொன்னது இதெல்லாம்?"

"நேற்று சகுந்தலாவை காட்பாடி ஸ்டேஷனில் பார்த் தேன். அவள் குடும்ப வரலாறு முழுவதும் ஒன்று விடாமல் சொன்னாள். உன்னைப் பார்க்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கிறாள்."

"நீங்கள் பேசிக் கொண்டிருங்கள். இதோ நான் போய் காப்பி வாங்கி வந்துவிடுகிறேன்" என்று பிளாஸ்க்கை எடுத்து கொண்டு போனார் காமுவின் தந்தை.

சுந்தரம் மனைவியின் கைகளைத் தன் கைகளுள் அடக்கிக் கொண்டு வெகு நேரம் அவள் அருகிலேயே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தான். அவனைக் கண்ணுரக் காண வேண்டுமென்ற வேட்கை தணிந்தது அவளுக்கு.

இதற்குள் மாமனர் இட்லியும் காப்பியும் வாங்கிக் கொண்டு வந்தார். "பசியோடு வந்திருப்பாய். இதை மரத்தடியில் கொண்டுபோய்ச் சாப்பிடலாம், வா" என்று சுந்தரை அழைத்தார் அவர். காமுவிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டான் சுந்தரம்.

மரத்தடிக்குச் சென்று இட்டிலி பார்சலை அவிழ்த்து, இட்டிலியை விண்டு வாயில் போட்டுக்கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/119&oldid=1313645" இலிருந்து மீள்விக்கப்பட்டது