பக்கம்:வழிப்போக்கன்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

"வீட்டுக்குப் போவோம். பக்கத்திலேயேதான் வீடு" என்றார் மாமனார்.

"காமு உடம்பைப்பற்றி டாக்டர்கள் என்ன சொல்லுகிறார்கள்? சரியாகிவிடுமா?" சுந்தரம் கேட்டான்.

"அவர்கள் நம்மிடம் பேசினால்தானே? கேட்டாலும் சரியாகப் பதில் சொல்வதில்லை. அடிக்கடி வந்து பரிசோதித்து விட்டு ஒருவருக்கொருவர் இங்கிலீஷில் பேசிவிட்டுப் போகிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன் காமுவின் உடம்பு இன்னும் ரொம்பக் கேவலமாக இருந்தது. பிழைப்பாளோ என்றே பயந்துவிட்டோம். இப்போது எவ்வளவோ தேவலை. அவளுக்கு கவலையே பாதி..வியாதி குணமானலும் இன்னும் ஒரு வருஷம் ஆகும் அவள் உடம்பு தேறுவதற்கும்...ம்...நீ என்ன செய்யப் போகிறாய்? ஏதாவது வேலைக்குப் போகப் போகிறாயா?”

"இப்போதுள்ள நிலையில் நான் என்ன செய்ய முடியும்? எனக்கு ஒன்றுமே புரியவில்லை.”

"நீ எவ்வளவோ புத்திசாலிதான். ஆனால் அதிர்ஷ்டம் தான் கூடிவரவில்லை உனக்கு."

"நெருப்பு தங்கத்தைச் சோதிப்பதுபோல் துன்பங்கள் என்னுடைய தைரியத்தை சோதித்துக் கொண்டிருக்கின்றன!” என்றான் சுந்தரம்.

"எதற்கும் சர்மாவைப் போய்ப் பார்! அவர் உன்மீது அக்கறை கொண்டவர். உனக்கு ஏதாவது வழிகாட்டுவார்!" என்றார் மாமனர்.

புகழ் பெற்ற வேலூர் மிஷன் ஆஸ்பத்திரி வாசலில் போய் நின்ற சுந்தரம் கடிகாரத்தைப் பார்த்தான். மணி மூன்றடித்து ஐந்து நிமிஷங்கள் ஆகியிருந்தது.

"தெய்வம், நோயாளி, குழந்தை-இம் மூவரையும் காணச் செல்லும்போது வெறுங்கையுடன் போகக் கூடாது என்பார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/120&oldid=1313647" இலிருந்து மீள்விக்கப்பட்டது