பக்கம்:வழிப்போக்கன்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

சுந்தரம் பையிலிருந்த இரண்டு பழங்களை எடுத்து ரசம் பிழிந்து அவரிடம் கொடுத்தான். அதை வாங்கிக் குடித்த போது சர்மாவின் கண்கள் பலபலவென்று நீரைப் பெருக்கின. "நான் மகாபாவி, சுந்தரம்!" உணர்ச்சி வசமாகிவிட்ட சர்மா உரக்கக் கூவிவிட்டார்.

"ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்?...உடம்பை அலட்டிக்கொள்ளாதீர்கள்" என்றான் சுந்தரம்

"என் மனசிலுள்ள துக்கம் வாய் திறந்து சொன்னால்தான் தீரும். உன்னை நான் அநாதையாக்கினேன். கடவுள் என்னைத் தண்டித்துவிட்டார். உன் ஜாதகம் சரியில்லை என்று உன்னையும் சகுந்தலாவையும் பிரித்தேன். உன்னத் தனியாகப் பட்டணத்துக்கு அனுப்பித் தவிக்கவிட்டேன். சாம்பசிவம் தீர்க்காயுசுடன் வாழ்வான் என்று நம்பி அவனுக்கு என் சகுந்தலாவைக் கொடுத்தேன். ஒருஅநாதைக்கு வாழ்வு அளிக்க வேண்டும் என்பதற்காக உன்னை அநாதையாக்கினேன். அவன் என்னையும் சகுந்தலாவையும் அநாதையாக்கிவிட்டு இந்த உலகைவிட்டே போய்விட்டான். தெய்வம் நின்று கொல்கிறது என்னே...எனக்கு இது வேண்டியதுதான்; இன்னமும் வேண்டியதுதான்..."

"மனசைத் தளர விடாதீர்கள். உங்களுக்கு ஒரு குறைவும் நேராது..."

"இதைவிட வேறு என்ன நேரவேண்டும்? என் குடும்பம் நிர்க்கதியாக நிற்கிறதே, அது போதாதா? என் சகுந்தலா வாழ்வு இழந்து கண்ணிர்விட்டுக் கலங்குகிறாளே, அது போதாதா?" சர்மா கதறி அழுதார்.

"காமுவுக்கு இப்போது எப்படி இருக்கிறது? நீ போய்ப் பார்த்தாயா?" நீங்கள் இருவருமே சுகத்தைக் காணுதவர்கள். அவள் வளரும் பயிர். அவளை எப்படியாவது காப்பாற்றியே தீரவேண்டும். சகுந்தலா அவள் கவலையாகவே இருக்கிறாள்..."

"அவள் பிழைத்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை எனக்கு பூரணமாக உண்டு. எங்கள் கலியாணத்தின்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/122&oldid=1313651" இலிருந்து மீள்விக்கப்பட்டது