பக்கம்:வழிப்போக்கன்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

125

“சகுந்தலா நேற்றே இங்கு வந்துவிட்டாள். அவளைப் பார்த்தது எனக்கு எவ்வளவோ ஆறுதலாயிருக்கிறது” என்றாள் காமு.

சுந்தர் டாக்டரை பார்க்கச் சென்றான்.

மேகக் குவியல்கள் காற்றிலே கலந்து, கலந்து உருமாறுவதைப் போல் சகுந்தலாவின் உள்ளத்தில் பல்வேறு உருவங்களைப் பெற்றுக் கொண்டிருந்தன. ஒன்றும் தோன்றாதவளாக உள்ளம் கலங்கிய நிலையில் உட்கார்ந்திருந்தாள் அவள்.

என் மனம் ஏன் குழம்புகிறது? இதோ சுந்தரின் கை பிடித்த காமு எத்தனை சாந்தமாக, எவ்வளவு அமைதியாக, இருக்கிறாள். சுந்தரிடத்தில் அவளுக்கு இல்லாத, உரிமை எனக்கு என்ன இருக்கிறது?.

காமு! —

“எத்தகைய உத்தம குணம் படைத்தவள்! தன் கணவன் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறாள்!”

“என்ன சகுந்தலா, பலமான யோசனையில் மூழ்கி விட்டாய்?”

“ஒன்றுமில்லை அக்கா!” என்றாள் சகுந்தலா. காமுவைப் பார்க்கப் பார்க்க அவள் மனம் என்னென்னவோ எண்ணத் தொடங்கியது.

“சகுந்தலா! உன்னுடைய அன்பும் ஆதரவும் இருக்கும் போது எனக்கு ஒரு கஷ்டமுமில்லை. உன்னுடைய நிலைமையை எண்ணும் போதுதான் எனக்கு வருத்தமாயிருக்கிறது.” என்றாள் காமு.

“என்னுடைய வாழ்வு போய் விட்டது, அக்கா அது திரும்பி வரப் போவதில்லை. நீங்கள் பிழைத்து எழுந்திருக்க வேண்டும். இனி நீங்கள்தான் வாழவேண்டும். இப்போது நான் தெய்வத்தை வேண்டிக் கொள்வதெல்லாம் இதுதான்” என்றாள் சகுந்தலா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/125&oldid=1315372" இலிருந்து மீள்விக்கப்பட்டது