பக்கம்:வழிப்போக்கன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

னேன்; நீ கேட்கவில்லை என்று கூறி, வட்டியைத் தள்ளிவிட்டு அசலை மட்டுமே பெற்றுக்கொண்டார்!” என்றார் அவர் நெஞ்சம் நெகிழ.

”அவரிடம் கொண்டுபோய் விட்டால் சுந்தரம் எப்படியும் முன்னுக்கு வந்துவிடுவான்!” என்றாள் அவர் மனைவி.

“என்னிடம் அவர் கொண்டுள்ள நட்புக்கும், மதிப்புக்கும் இவனுல் பங்கம் வந்துவிடக் கூடாதே என்றுதான் யோசிக்கிறேன்!” என்றார் அவர்.

“அவனை அவர் நல்வழியிலேயே கொண்டு செல்வார். நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாதீர்கள். அதோ கவுளி சொல்கிறது. நாளைக்கே சுந்தரத்தை அழைத்துக்கொண்டு புறப்படுங்கள்!” என்று அந்த அம்மாள் அவரைத் தைரியப்படுத்தினாள்

“சரி; உங்கள் இருவர் ஆசையையும் கெடுப்பானேன்? நாளைக்கே புறப்படுகிறேன்!” என்றார் அவர் தீர்மானத்துடன்.

று நாள் காலை.

புதிய இடமாகையால், ஏதோ கூண்டில் பிடித்துப் போட்ட மாதிரி இருந்தது.

சுந்தரம் மெதுவாகப் படுக்கையை விட்டு எழுந்து தோட்டத்துப் பக்கம் சென்றான். குளிக்கும் அறை கரிப்புகை படிந்து ஒரே இருட்டாயிருந்தது. அந்த அறைக்குள் நுழைந்த சுந்தரம் பாசித் தரையில் காலை வைத்துவிடவே, சறுக்கிக் கீழே விழுந்துவிட்டான். யாரோ குபிரெனச் சிரிக்கும் குரல் கேட்டு வெட்கத்துடன் திரும்பிப் பார்த்தான். அங்கேதான் அந்தப் பெண் நின்றுகொண்டிருந்தாள்—அவள்தான் சகுந்தலா!

பில்ட்டரிலிருந்த வடி கட்டிய காப்பித் துளை எடுத்து ரோஜாச் செடித் தொட்டியில் போட்டுக் கொண்டிருந்தாள் அவள். சுந்தரத்தையும், அவன் குடுமியையும், பித்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/15&oldid=1306809" இலிருந்து மீள்விக்கப்பட்டது