பக்கம்:வழிப்போக்கன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16


போடாத நலுங்கிய சட்டையையும் பார்த்தபோது அவளுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை!

“பாவம், விழுந்துட்டியா? அடி பட்டுதா?” சகுந்தலா கேட்டாள்.

“இல்லே!” என்று கூறிய சுந்தரம் சட்டையைச் சரி செய்து கொண்டே வேதனையுடன் எழுந்து நின்றான்.

“பொத்தான் எங்கே? கீழே விழுந்துட்டுதா?”

“இருந்தாத்தானே விழும்? என் சட்டைக்குப் பொத் தானே கிடையாது!”

“இந்தா, இந்தப் பின்னைப் போட்டுக்கோ!” என்று கூறித் தன் கை வளையலில் மாட்டியிருந்த பின் ஒன்றைக் கழற்றி அவனிடம் கொடுத்தாள் அவள். கொடுத்துவிட்டு, “நீ யாரு?” என்று கேட்டாள்.

“நான் சுந்தரம்; படிக்க வந்திருக்கேன்.நீ–?”

“நான் தான் ஆர். சகுந்தலா. பஸ்ட் பாரம் ஏ செக்ஷன்; போர்டு ஹைஸ்கூல், ஆற்காடு. எங்கப்பா டில்லியிலே இருக் கார்!” என்றாள் பெருமிதத்துடன்.

“அம்மா ?”

“அம்மா இல்லே; செத்துப் போயிட்டா!” உதட்டைக் கோணலாகச் சரித்துக்கொண்டாள் சகுந்தலா.

சுந்தரம் பல் துலக்கிக்கொண்டு உள்ளே வருவதற்குள்ளாகவே சகுந்தலா பாட்டியிடமிருந்து அவனுக்குத் தயாராகக் காப்பி வாங்கி வைத்திருந்தாள். ஊரில் பழையது சாப்பிட்டுப் பழகிப்போன சுந்தரத்துக்கு, சகுந்தலா கொடுத்த காப்பி தேவாமிருதமாயிருந்தது!

“மாடிக்கு வா, என் கொலுப் பொம்மைகளையெல்லாம் காட்டறேன் உனக்கு!” என்று சுந்தரத்தின் கையைப் பிடித்து மாடிக்கு அழைத்துச் சென்றாள் அப்பெண். அவளுக்கு என்னவோ சுந்தரத்தை ரொம்பப் பிடித்துவிட்டது. கண்ணாடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/16&oldid=1306832" இலிருந்து மீள்விக்கப்பட்டது