பக்கம்:வழிப்போக்கன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

பீரோ ஒன்றை திறந்து, அதிலிருந்த பொம்மைகளையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டினாள். இன்னொரு பீரோ நிறையப் புத்தகங்கள் நெட்டுக் குத்தாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. அவற்றின் முதுகுப்புறத்தில் பொறிக்கப் பட்டிருந்த பொன் எழுத்துக்கள் கண்ணைப் பறித்தன.

“இதெல்லாம் என் தாத்தாவின் புத்தகங்கள்”என்முள் சகுந்தலா பெருமையோடு.

கீழே, பூஜை அறையிலிருந்து மணி ஓசை கேட்டுக் கொண்டிருந்தது. சகுந்தலா ஒரு சின்ன அட்டைப் பெட்டியைக் கொண்டு வந்து, “இதோ பார்த்தாயா?” என்றாள் கட்டுக்கடங்காத பூரிப்புடன். அதில் உடைந்த வளையல் துண்டுகள், கனமான அரையணாக் காசு ஒன்று, சாக்லேட்டிலிருந்து உரித்த வெள்ளி நிற ஜிகினாத் தகடு, ஏழெட்டுச் சோழிகள், சிவப்பு உல்லன் நூல், மயில் இறகு, ஒரு முழுப் பென்சிl—அவ்வளவும் இருந்தன.

“இந்தப் பென்சில் உனக்கு வேணுமா? இந்தா எடுத்துக் கோ, தாத்தா எனக்கு நிறையப் பென்சில் வாங்கிக் கொடுப்பாரே! வரயா, ஊஞ்சல்லே விளையாடலாம்?” என்று உற் சாகத்துடன் ஊஞ்சலுக்குத் தாவினாள் சகுந்தலா.

‘கிரீங்,—கி—ர்—ரீ—ங்’ என்று ஊஞ்சல் இரண்டு சுருதியில், இரண்டு கதியில் இயங்கிக் கொண்டிருந்தது. அந்த ஓசை கேட்ட சர்மா கீழே இருந்தபடியே, “சகுந்தலா! அங்கே என்ன சத்தம்?” என்று குரல் கொடுத்தார். அவருடைய குரலில் ஒரு கனமும் கண்டிப்பும் இருந்தது.

“ஒண்ணுமில்லே, தாத்தார் நானும் சுந்தரமும் ஊஞ்சல்லே விளையாடறோம்!” என்றாள் சகுந்தலா.

“சுந்தரத்தை இங்கே வரச் சொல்லு!”

சுந்தரம் பயந்தபடி அவருக்கு எதிரே போய் நின்றான்.

“ஏண்டா, காப்பி சாப்பிட்டாயா? ”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/17&oldid=1306866" இலிருந்து மீள்விக்கப்பட்டது