பக்கம்:வழிப்போக்கன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

சுந்தரம் அவள் முகத்துக்கு எதிரே தன் முகத்தைக் கொண்டுபோய் காட்டினான். சகுந்தலா அவன் தலையை அழகாக வாரி விட்டாள். அவன் முன் நெற்றி முடியில் கொஞ்சும் எடுத்து, ‘ஸ்பிரிங்’ போல் சுருட்டி, நெற்றியிலே தவழவிட்டாள்!

“வாசலில் யாரோ கதவைத் தட்டறாப்போல இருக்கு...! ” "ஐயோ, தாத்தா வந்துவிட்டார்!" என்று அலறிக் கொண்டே கீழே ஓடினாள், சகுந்தலா.


4.

குந்தலா மாடியிலிருந்து கீழே இறங்கிச் சென்றதும், அவள் கூந்தலில் இருந்த முல்லையின் நறுமணம் வெகு நேரம் வரை சுந்தரையே சுற்றிக் கமழ்ந்து, அவன் உள்ளத்தில் ஒரு விதக் கிளர்ச்சியையும் ஏக்கத்தையும் உண்டாக்கி விட்டது. தன்னை வாட்டிக்கொண்டிருந்த அந்த உணர்ச்சியையும் ஏக்கத்தையும் பெருமூச்சுக்களாக வெளிப்படுத்திக் கொண்டிருத்தான். பொழுது விடிந்ததும் படுக்கையை விட்டு எழுந்தபோது, மேஜைக்கு அருகில் விழுந்து கிடந்த அந்த முல்லைமொட்டு வாடி வதங்கியிருப்பதை அவன் கண்டான். காலையில் அரும்பும் காதல் மொட்டு, மாலையில் மலர்ந்து, இரவெல்லாம் மணம் வீசிப் பொழுது விடியுமுன் வாடி வதங்கியல்லவா போய்விடுகிறது!

அந்த மலரைத் தூக்கித் தூர எறிவதற்கு மனமில்லாமல் எடுத்து மேஜைக்குள் பத்திரப்படுத்திவிட்டு அவன் கீழே இறங்கிச் சென்றான். தோட்டத்தில் எறும்புகளுக்கு அரிசி போட்டுக் கொண்டிருந்தார் சர்மா. அவரைக் காணவே அவனுக்கு அச்சமாக இருந்தது. தானும் சகுந்தலாவும் முதல் நாள் இரவு மாடியில் கூடிப் பேசிக் கொண்டிருந்ததை அவர் அறிந்திருக்கமாட்டார் என்றே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/24&oldid=1315918" இலிருந்து மீள்விக்கப்பட்டது