பக்கம்:வழிப்போக்கன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

அவன் எண்ணியிருந்தான். ஆனால் அவரோ எல்லாவற்றையும் கவனித்துவிட்டு, ஏதும் அறியாதவர் போல் இருந்தார்.

காலட்சேபத்திலிருந்து திரும்பிய அவர், வந்ததும் கதவைத் தட்டவில்லை. வராந்தாவிலுள்ள படிகளின் வழியாக மாடிக்கு ஏறிச் சென்றார். அங்கே சுந்தரும் சகுந்தலாவும் சிரித்துப் பேசி விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டுவிட்டுச் சந்தடி செய்யாமல் கீழே இறங்கிச் சென்று கதவைத் தட்டினர். அதைக் கேட்டுத்தான் சகுந்தலா வந்து கதவைத் திறந்தாள்!

சகுந்தலாவின் திருமணத்தை சீக்கிரமே முடித்துவிட வேண்டுமென்ற கவலை அன்றே தோன்றிவிட்டது அவருக்கு. ஆயினும், அதற்கு முன் அவள் கலியாண விஷயமாக டில்லியிலுள்ள தம் மாப்பிள்ளையின் கருத்து என்னவென்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்று அவர் எண்ணினார். அப்புறம் சுந்தரின் ஜாதகத்தையும் வாங்கிப் பார்த்தாக வேண்டும். ஒரு வேளை இது சரியாக இருந்தால் சுந்தரைச் சுவீகாரம் எடுத்துக் கொள்ளக் கங்காதரய்யரின் சம்மதத்தைப் பெற்ருக வேண்டும். சுந்தரம் கங்காதரய்யரின் ஒரே மகன். அவரிடம் சுவீகார விஷயமாக எப்படிப் பேசுவது? இத்தகைய ஒரு கெட்ட எண்ணத்தை மனதில் வைத்துக் கொண்டே சுந்தரைத் தாம் ஆற்காட்டில் படிக்க வைத்துக் கொண்டிருப்பதாக அல்லவா அவர்கள் நினைப்பார்கள்?

சகுந்தலாவோ சுந்தரை மனமார நேசிக்கிறாள். அவள் விரும்பும் ஒரு பொருளை அவளுக்கே உரியநாக்கி மகிழ வேண்டும் என்பதுதான் சர்மாவின் எண்ணமும்.

சகுந்தலா, சர்மாவின் பெண் வயிற்றுப் பேத்தி. சிறு வயதிலேயே தாயாரை இழந்துவிட்ட அப்பேதை இவ்வளவு காலமும் சர்மாவின் ஆதரவிலேயே வளர்ந்து வந்தாள். அவளைக் காணும்போதெல்லாம் சர்மாவுக்குத் தம் மனைவியின் நினைவு வந்துவிடும். காரணம் அவருடைய மனைவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/25&oldid=1315913" இலிருந்து மீள்விக்கப்பட்டது