பக்கம்:வழிப்போக்கன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

சகுந்தலாவின் வயதில் இவள் ஜாடையாகவே இருந்தது தான்!

கோடை விடுமுறை தொடங்க இன்னும் சில நாட்களே இருந்தன. மண்டித் திண்ணையில் உட்கார்ந்திருந்த சர்மாவிடம் தபால்காரர் இரண்டு கடிதங்களைக் கொடுத்துவிட்டுப் போனார்.

“அன்புள்ள சர்மாவுக்கு,

சுந்தரத்துக்குப் பரீட்சை நடந்து முடிந்திருக்குமென்று நினைக்கிறேன். மாங்குயில் மாரியம்மன் திருவிழாவுக்குக் காப்புக் கட்டியிருக்கிறார்கள். இன்றைக்கு எட்டாவது நாள் விழா. தாங்கள் அவசியம் சகுந்தலாவையும் சுந்தரையும் அழைத்துக் கொண்டு வரவும்.

இப்படிக்கு,
கங்காதரய்யர்.”

அடுத்தபடியாக மாப்பிள்ளையின் கடிதத்தை எடுத்துப் படித்தார் சர்மா.

“மாமாவுக்கு, நமஸ்காரம்.

நான் டில்லியிலிருந்து புறப்பட்டுச் சனிக்கிழமையன்று ஆற்காடு வருகிறேன். டிசம்பரில் நான் இங்கிலாந்துக்குப் போகவிருப்பதால், அதற்குள் சகுந்தலாவின் கலியாணத்தை நடத்தி முடித்துவிட விரும்புகிறேன். திருமணத்தை ஆற்காட்டிலேயே வைத்துக்கொண்டு விடலாம்.

அங்கே இரண்டு நாட்கள் நான் தங்கியிருப்பேன். அப்போது சகுந்தலாவின் கலியாண விஷயமாக நாம் ஒரு முடிவுக்கு வரலாம்.

இப்படிக்கு,
ராமநாதன்”

கடிதங்கள் இரண்டையும் பெட்டியில் வைத்தபோது, ‘மாப்பிள்ளை வருவது நல்லது தான்,’ மாங்குடி செல்லுமுன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/26&oldid=1322747" இலிருந்து மீள்விக்கப்பட்டது