பக்கம்:வழிப்போக்கன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

அதை எடுத்துப் படித்த சுந்தரத்தின் முகம் கறுத்தது: உதட்டைக் கடித்துக்கொண்டான். சற்று நேரத்துக்கெல்லாம் தன் மனதைத் தேற்றிக் கொண்டவனாய், “உம் என்ன செய்யலாம்? அக்கறையாகத்தான் படித்தேன்; போய்விட்டது. இந்தப் படிப்பு போதும் எனக்கு. பட்டணத்துக்குப் போய் ஏதாவது ஒரு வேலைத் தேடிக்கொள்கிறேன்! ”என்றான்.

“ஆமாம், பி.ஏ. பாஸ் பண்ணியிருக்கிறாய் அல்லவா? போனவுடனே வேலை கிடைத்துவிடும் உனக்கு. முதலில் ஆற்காட்டுக்குப் போய் சர்மா என்ன சொல்கிறாரோ அதன்படி செய்; பட்டணம் போவதாயிருந்தாலும் அவர் உத்தரவைப் பெற்றுக்கொண்டே போக வேண்டும்; தெரிந்ததா? நம் குடும்பத்தின் தெய்வம் அவர். மேற்கொண்டு நீ படிக்க வேண்டும் என்று அவர் சொன்னால் படி; பட்டணம் போகச் சொன்னால் போ, மனதிற்குள்ளாகவே ஆயிரம் திட்டங்கள் போட்டு வைத்திருப்பார் அவர்! எதையும் வெளியே சொல்லிக்கொள்ள பமாட்டார். அவருடைய அன்பு குடத்திலிட்ட விளக்கைப் போன்றது: சமயம் வரும்போது அவர் செய்யும் காரியத்திலிருந்துதான் அது வெளிப்படும்.தம் மனதில் ஏதோ இருக்கக் கொண்டுதான் அவர் உன் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு போயிருக்கிறார்” என்றார் கங்காதரய்யர்.

சர்மா மண்டிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த நேரம்: அவருக்கு எதிரே போய் நின்முன் சுந்தர்.

“என்ன சுந்தர், இப்போது தான் வருகிறாயா? ஊரில் எல் லோரும் சவுக்கியமா?” என்று விசாரித்தபடியே வாசல் பக்கம் மெதுவாக நடந்தார் சர்மா.

“ஆமாம்” என்று தலைகுனிந்தபடியே பதில் அளித்தான் சுந்தர்.

“மேற்கொண்டு என்ன செய்யப் போகிறாய்? மறுபடியும் படிக்கப் போகிறாயா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/44&oldid=1306820" இலிருந்து மீள்விக்கப்பட்டது