பக்கம்:வழிப்போக்கன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

மெல்லிய குரலில் மெதுவாக அழைத்தாள் சகுந்தலா

“ம்”

“கோபமா?”

“இல்லே!”

“பட்டணத்துக்கா போகிறாய்?”

“ஆமாம்.”

“ஆற்காட்டிலேயே இருப்பாய் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன்!” அவள் கண்களிலிருந்து சிந்திய நீர் முத்துக்கள் கீழே விழுந்து சிதறின. குனிந்தபடியே உட்கார்ந்திருந்த சுந்தரத்துக்கு அதைக் கண்டபோது இதயமே வெடித்துச் சிதறுவதுபோல் இருந்தது!

“அழாதே, சகுந்தலா!” அவள் கைகளைப் பிடிக்கப் போனவன் ஏனே சட்டெனப் பின் வாங்கிக்கொண்டான்.

“பட்டணத்திலே எங்கே தங்கப் போறே?”

“எங்கேயோ!”

“எங்கே சாப்பிடுவே?”

“லெட்டர் போடுவியா?”

“பார்க்கலாம்.”

இந்தா...

“என்னது?”

“பணம்”

“ஏது?”

“ஏதோ, வாங்கிக்க மாட்டாயா?”

“சரி, கொடு!” அவளிடமிருந்து இரண்டு பத்து ரூபாய் நோட்டுக்களை வாங்கிப் பெட்டியில் வைத்துக் கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/47&oldid=1309636" இலிருந்து மீள்விக்கப்பட்டது