பக்கம்:வழிப்போக்கன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

மண்டியிலிருந்து சீக்கிரமே திரும்பிவிட்ட சர்மா, “தயாராயிருக்கிறாயா, சுந்தர்?’ என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார்.

"பெட்டி படுக்கையெல்லாம் கட்டி வைத்துவிட்டேன்; புறப்பட வேண்டியதுதான்!” என்றான் சுந்தர்.

"கையில் பணம் வைத்திருக்கிறாயா?' என்று கேட்டார் சர்மா.

"ஐம்பத்தைந்து ரூபாய் இருக்கிறது. அப்பா இருபத்தைத்து ரூபாய் கொடுத்தார்; சோடா பாக்டரிக்கு போர்டு எழுதிக் கொடுத்ததில் கிடைத்த முப்பது ரூபாயும் அதனுடன் சேர்ந்து இருக்கிறது″ என்றான் சுந்தர்.

"வருமானத்தோடுதான் கிளம்புகிறாய் என்று சொல்! ம், நான் ஏதாவது கொடுக்கட்டுமா?"

"வேண்டாம், மாமா! உங்கள் ஆசீர்வாதம் போதும்" என்ற சுந்தர், அவர் கால்களில் விழுந்து நமஸ்கரித்தான்.

"என் ஆசிர்வாதம் நிறைய இருக்கிறது. பட்டணவாசம் புதுசு உனக்கு. துர்ச்சகவாசம் எதுவும் வைத்துக்கொள்ளாதே! எந்தக் கஷ்டங்கள் வந்தாலும் நேர்மையாக நடந்துகொள். அடிக்கடி கடிதம் போடு இந்தா, இந்தக் கம்பராமாயணத்தை கையோடு எடுத்துக்கொண்டு போ! மனம் சோர்வடைகிற போது இதை எடுத்துப் படி, கவலைகள் தீர்ந்து போகும்!” என்று கூறிப் பார்சலாகக் கட்டியிருந்த அப்புத்தகத்தை அவனிடம் கொடுத்தார் அவர், சுந்தரம் அதைப் பெற்றுக் கொண்டு புன்சிரிப்புடன் சர்மாவைப் பார்த்தான்.

"என்ன பார்க்கிறாய்? ராமாயணம் படித்தால் கவலைகள் எப்படித் தீரும் என்றுதானே யோசிக்கிறாய்? ராமனுடைய கஷ்டங்களைப் படிக்கும்போது அவனைக் காட்டிலும் நாம் என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/48&oldid=1320968" இலிருந்து மீள்விக்கப்பட்டது