பக்கம்:வழிப்போக்கன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

கஷ்டப்பட்டு விட்டோம் என்று ஒர் ஆறுதல் ஏற்படும். அதுவே நம் கவலையைத் தீர்க்கும்” என்றார் சர்மா.

“போய் வருகிறேன், மாமா!” என்று சுந்தரம் விடை பெற்றுக் கொண்டபோது, அவனுக்கு இதயத்தின் அடிவாரத்திலிருந்து துக்கம் பொங்கிக்கொண்டு வந்தது.

“சாயபு, சுந்தரை ஜாக்கிரதையாகக் கொண்டுபோய் ரெயிலேற்றிவிட்டு வா!” என்றார் சர்மா. சுந்தர் வண்டியில் ஏறுமுன் காவேரிப் பாட்டியிடம் சொல்லிகொள்ளும் சாக்கில் உள்ளே போனான். சகுந்தலா அங்கே கண்ணிரும் கம்பலையுமாக நின்று கொண்டிருந்தாள்.

போயிட்டு வரேன், பாட்டி! என்று சொல்லிக் கொண்டு புறப்பட்ட சுந்தரின் தொண்டையிலிருந்து ‘வரேன், சகுந்தலா!’ என்று கிளம்பிய வார்த்தைகள் வெளியே வராமலேயே தடைப்பட்டு நின்றுவிட்டன. தலை குனிந்தவாறே வாசலுக்குப்போய் வண்டியில் ஏறிக்கொண்டான். இதயமில்லாத வண்டி மீண்டும் அந்த இரு இளம் உள்ளங்களையும் பிரித்துவிட்டுப் புறப்பட்டது.

வாசலில் வந்து நின்ற சகுத்தலாவுக்கு உலகமே தன் கால்களிலிருந்து நழுவி ஒடுவதைப்போல் இருந்தது!

தே ராணிப்பேட்டை ஸ்டேஷன்.

மனைவியிடம் சொல்லிக்கொண்டு சென்னைக்குப் போய்க் கொண்டிருந்த வழிப்போக்கன் சுந்தரம், பாலாற்றங்கரைக்கு வந்தபோது தன்னுடைய பால்ய வயது நினைவுகளில் லயித்த வனாய்த் தன்னை மறந்து தன் கையிலிருந்த பையை விளாமரத்தடியில், பிள்ளையார் கோயிலுக்கு எதிரிலேயே வைத்து விட்டு வந்துவிட்டான் அல்லவா? ஸ்டேஷன் வரை நடந்து வந்துவிட்ட பிறகுதான் அவனுக்குச் சுய நினைவு வந்தது.

கையிலிருந்த பையைக் காணாமல் துணுக்குற்றவனாய், “அடடா! பிள்ளையார் கோயிலுக்கு எதிரில் அல்லவா மறந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/49&oldid=1309653" இலிருந்து மீள்விக்கப்பட்டது