பக்கம்:வழிப்போக்கன்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை

உலகத்தில் எல்லோரும் வழிப்போக்கர்களே. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் போய்க் கொண்டு இருக்கிறார்கள். சிலர் எங்கே போகிறோம் என்கிற இலட்சியம் இல்லாமலே போய்க் கொண்டு இருக்கிறார்கள். சிலர் இருட்டிலே நடக்கிறார்கள்; சிலர் ஒளியிலே நடக்கிறார்கள்; சிலர் ஒளியைத்தேடி நடக்கிறார்கள்; சிலர் கல்லும் முள்ளும் நிறைந்த கரடு முரடான பாதையில் நடக்கிறார்கள்; சிலர் பட்டு விரித்த பாதையில் செல்கிறார்கள். இரண்டுங்கெட்ட இடர்ப்பட்ட நிலையில் இடை வழியிலேயே பயணத்தை முடித்துக் கொள்பவர்களும் பலர்.

அவ்வப்போது வறுமையின் கொடும் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, இடையிடையே குறுக்கிடும் இடையூறுகளையும், தோல்விகளையும் எதிர்த்துப்போராடிய வண்ணம் வாழ்க்கையைப் பஞ்சினும் இலேசாக மதித்துப் புன்னகை பூத்தபடியே முன்னேற்றம் காண வழி தேடும் சுந்தரத்தின் கதைதான் இந்த “வழிப்போக்கன்.”

—சாவி
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/5&oldid=1304893" இலிருந்து மீள்விக்கப்பட்டது