பக்கம்:வழிப்போக்கன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

இனி?......

சென்னைக்குப் போய் என்ன செய்வது?

எங்கெங்கேயோ முயன்று பார்த்துவிட்டான். ஒரு வேலையும் கிடைக்கவில்லை அவனுக்கு. போதுமான வருமானம் இன்றிச் சென்னையில் தனிக் குடித்தனம் போடுவது எப்படி?

கிராமத்தில் தங்கியிருந்தபோது அவன் மனைவி கூறிய உருக்கமான வார்த்தைகள் அவன் நினைவுக்கு வந்தன.

“எத்தனை காலத்துக்குத்தான் என்னை என் தாய் வீட்டிலேயே வைத்திருக்கப் போகிறீர்கள்? மற்ற பெண்களைப் போல எப்போதுதான் நானும் குடியும் குடித்தனமுமாக உங்களுடன் வாழப் போகிறேனோ?"

பத்து நாட்களாக மாமனார் வீட்டில் வேளா வேளைக்கு டிபனும் காப்பியும் அவன் அறையைத் தேடி வந்து கொண்டிருந்தன. மாமனர் அவ்வப்போது வந்து, 'குளித்தாயா, சாப்பிட்டாயா?' என்று அன்புடன் விசாரித்துக் கொண்டிருந்தார். அவர் ரொம்ப சாது மனிதர்; உரக்கப் பேசத் தெரியாது அவருக்கு. ஏழெட்டு வருட காலமாக மாப்பிள்ளை நிரந்தரமான வேலை எதுவுமின்றிச் சென்னையில் சுற்றிக் கொண்டிருப்பது பற்றி அவர் சிறிதும் மனக்கிலேசம் அடையவில்லை; அதைப் பற்றிச் சலிப்புடன் ஒரு வார்த்தை பேசியதுமில்லை. "அவர் புத்திசாலிதான்; அதிருஷ்டம் நிலைக்கவில்லை அவனுக்கு. கத்தரி யோகம்!” என்று மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பார்.

சுந்தரத்தின் பெரிய மாமனாரும் அதே கிராமத்தில்தான் இருந்தார். சுந்தரத்துக்கு இதமான வார்த்தைகள் சொல்வதாக எண்ணிக்கொண்டு, உனக்குத்தான் நன்றாக டிராயிங் போட வருகிறேதே! டிரெயினிங் படித்துவிட்டு ஏதாவது ஒரு ஸ்கூலில் டிராயிங் மாஸ்டராக அமர்ந்து விடுவதுதானே?" என்று யோசனை கூறினார்.

சுந்தரத்தின் லட்சியம் வெறும் டிராயிங் மாஸ்டர் ஆவதல்ல என்பதை அறியாத அப்பாவி அவர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/6&oldid=1310635" இலிருந்து மீள்விக்கப்பட்டது