பக்கம்:வழிப்போக்கன்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54


அவன் மனம் குழம்பிப் போயிருந்தது.பசி ஒரு பக்கம்; “ராயருக்கு எப்படி வாடகை கொடுப்பது? நாளைச் சாப்பாட்டுக்கு என்ன செய்வது?” என்ற கவலை இன்னொரு பக்கம்.

"ஆண்டவனே! எனக்கு என்ன வழி காட்டப் போகிருய்?" என்று உள்ளம் உருகக் கடவுளை வேண்டினான் அவன்.

“கஷ்டங்கள் வருகிறபோது கம்பராமாயணத்தை எடுத்துப்படி!” என்று சர்மா சொன்ன மணிமொழிகள் அவன் காதுகளில் ஒலித்தன.

பார்சலாகக் கட்டப்பட்டிருந்த அந்தக் கம்பராமாயணத்தை எடுத்துப் பிரித்து, ஒவ்வொரு ஏடாகத் தள்ளிக் கொண்டே வந்தான். சுந்தர காண்டத்துக்கு வந்தபோது அவன் முகம் ஆச்சரியத்தால் மலர்ந்தது.

என்ன அதிசயம்! அந்தப் பகுதியில் ஐந்து பத்து ரூபாய் நோட்டுக்கள் அடுக்காக வைக்கப்பட்டிருந்தன! சுந்தரத்தின் கஷ்ட காலத்துக்கு உதவட்டும் என்று சர்மாதான் அதை வைத்திருந்தார்!

8

சுந்தரம் தமிழ் போதினி காரியாலயத்தைத் தேடிச் சென்ற சமயம் அந்தப் பத்திரிகை முதலாளி தபாற்காரருடன் பேசிக்கொண்டிருக்கவே. சுந்தரம் வெளியிலேயே காத்திருந்தான்.

தபாற்காரர் வெளியே சென்றார் போஸ்ட்மேன் எப்போது போகப் போகிறார் என்று காத்துக்கொண்டிருந்த கம்பாசிட்டர் ஒருவர், அடுத்த கணமே முதலாளியின் முன் பிரசன்னமானர்.

“என்னய்யா, மணியார்டரைக் கண்டுட்டு வந்துட்டியா? போய் வேலையைப் பாருய்யா! எனக்குத் தெரியும், எப்பயோ கொடுக்கணும்னு?”-இது முதலாளியின் குரல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/54&oldid=1322831" இலிருந்து மீள்விக்கப்பட்டது