பக்கம்:வழிப்போக்கன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58



இந்தச் சமயத்தில் 'போஸ்ட்' என்ற குரல் கேட்கவே, திரும்பிப் பார்த்தான். தபாற்காரர் அவனிடம் இரண்டு கடிதங்களைக் கொடுத்து விட்டுப் போனார். ஒன்று மஞ்சள் நிறக் கலியாண அழைப்பிதழ்; இன்னொன்று மாங்குடியிலிருந்து அவன் அப்பா எழுதிய கடிதம். முதலில் அந்த மஞ்சள் நிறக் கவரையே பிரித்தான். பிரித்தவன் சற்றுநேரம் அதையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு நின்றான்!"

‘சகுந்தலாவுக்கும் சாம்பசிவத்துக்கும் அடுத்த ஞாயிற்றுக் கிழமை ஆற்காட்டில் திருமணம்!’

இதுதான் அந்த அழைப்பிதழில் அடங்கியிருந்த விஷயம். திடீரென்று வானமெங்கும் கருமேகங்கள் சூழ்ந்துகொண்டு, ஒளியும் காற்றும் ஸ்தம்பித்து விட்டதுபோல் தோன்றியது சுந்தருக்கு. துக்கத்தை அடக்க எவ்வளவோ முயன்றும், அவனையும் மீறிக்கொண்டு கண்ணீர்த் துளிகள் வெளிப்பட்டுவிட்டன.

"சாம்பசிவம், சாம்பசிவம்" என்று இரண்டு முறை அவன் உதடுகள் முணுமுணுத்தன. யார் இந்த சாம்பசிவம்? அந்தக் கறுப்புப் பையனா? சமையற்காரியின் மகளா? சகுந்தலா! உனக்கா இந்தத் தலைவிதி? அழகையே நாடும் உன் மனம் சாம்பசிவத்தை மணந்துகொள்ள எப்படித் துணிந்தது?"

அப்பாவின் கடிதத்தை எடுத்துப் பார்த்தான் அவன்.

"சுந்தருக்கு, ஆசீர்வாதம்.

நேற்று சர்மா இங்கே வந்தார். சகுந்தலாவுக்கு அடுத்த ஞாயிற்றுக் கிழமை ஆற்காட்டில் திருமணம் நடக்கிறது. என்னையும் உன் அம்மாவையும் கட்டாயம் கலியாணத்திற்கு வரவேண்டும் என்று வற்புறுத்தி அழைத்துவிட்டுப் போயிருக்கிறார். நாங்களும் போகிறோம். உனக்கும் அழைப்பு அனுப்புவதாகச் சொன்னார். 'திருமணம் என்பது பெரியோர்களால் நிச்சயிக்கப்படுதில்லை; பிறக்கும்போதே நிச்சயமாகி விடுகிறது'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/58&oldid=1320970" இலிருந்து மீள்விக்கப்பட்டது