பக்கம்:வழிப்போக்கன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57


ஒரு நாள் அவர் ஓய்வாக உட்கார்ந்திருந்தபோது, "எனக்குச் சித்திரம்கூட வரையத் தெரியும். ஏதாவது படம் எழுதிக் கொடுத்தால் உங்கள் பத்திரிகையில் போடுவீர்களா?” என்று கேட்டான்.

"ஓ, எழுதிக்கிட்டு வாயேன்; போடறேன்!” என்றார் அவர்.

அவ்வளவுதான். அப்போதே மூர்மார்க்கெட்டுக்குச் சென்று பழைய இங்கிலீஷ் பத்திரிகை ஒன்றை விலைக்கு வாங்கி வந்து, அதிலிருந்த ஒரு சித்திரத்தைக் காப்பி அடித்துக்கொண்டு போய்க் கொடுத்துவிட்டான் அவன்.

அடுத்த தமிழ் போதினி' சஞ்சிகையை வாங்கிப் பிரித்த போது, என்ன ஆச்சரியம், சுந்தரம் எழுதிய புடம் அதில் வெளியாகியிருந்தது! அதிசயம், ஆனால் உண்மை!’ என்ற பகுதியின் கீழ், தான் வரைந்த படம் வெளியாகியிருப்பதைக் கண்ட சுந்தருக்குத் தலை கால் புரியவில்லை; அன்றெல்லாம். கால்கள் தரையில் படாமல் அவன் ஆகாசத்திலேயே மிதந்து கொண்டிருந்தான். அந்த நிகழ்ச்சியே அவனுக்கு அதிசயம். ஆனால் உண்மையாக இருந்தது!

"தமிழ் போதினி" பத்திரிகையைத் தன்னுடைய அறைக்கு எடுத்துக்கொண்டு போய், அதிலுள்ள தன் சித்திரத்தையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். தான் போட்டிருந்த கோடுகள் ஒவ்வொன்றும் அப்படி அப்படியே அதில் வந்திருப்பதைக் சுண்டபோது அவனுக்குப் பெருமை தாங்கவில்லை. 'சுந்தர்'என்னும் கையெழுத்துக்கூட அப்படியே பிரதியாகியிருந்தது. ரதோ மகத்தான காரியத்தைச் சாதித்து விட்டது போன்ற ஒரு பரபரப்பும் ஆவேசமும் அவனை ஆட்கொண்டது. 'இந்தச் சித்திரத்தை சகுந்தலா பார்த்தால் ஆச்சரியப்படுவாள்!'என்று நினைத்த அவனுக்கு, உடனே அந்தப் பத்திரிகையோடு அப்படியே ஆற்காட்டுக்குப் பறந்துபோய் சகுந்தலாக்கு, அதைக் காட்ட வேண்டும் போல் இருந்தது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/57&oldid=1322720" இலிருந்து மீள்விக்கப்பட்டது