பக்கம்:வழிப்போக்கன்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

"ஏன் இல்லே? நீங்க படம் எளுதுங்க; நான் பணம்தரேன் நீங்கதான் பளய சிநேகத்தை வெட்டிக்கிட்டுப் போயிட்டீங்க. நான் அப்படி இல்லே! எப்பவும்ஒரே மாதிரிதான் இருக்கேன்!"

சுந்தரம் மவுனமாகவே நண்பனைப் பார்த்தான்.

"என்ன பார்க்கிறீங்க? பளசையெல்லாம் மறந்துடுங்க; அந்தக் காலம் வேறே! இப்ப முன் மாதிரியெல்லாம் இல்லே; செக் வெட்டிக்கிட்டே இருக்கேன். நீங்க மட்டும் சொன்ன டயத்திலே படத்தை எளுதிக் கொடுங்க; பணத்தை உடனே கொடுத்துடறேனா இல்லையா பாருங்கள்?"

"புதுப் புத்தகம் ஏதாவது வெளியிடப் போறீங்களா"

"ஆமாம்; ஆறு புத்தகங்களுக்கு அட்டைப் படம் போட்டுத் தருவீங்களா? அதுக்கு முன்னலே உங்களுக்கு இன்னொரு அர்ஜண்ட் வேலை இருக்குது. நானே உங்க ரூமுக்கு ஆள் அனுப்பித் தேடினேன். நீங்க இப்போ நல்ல தம்பி தெருவில் இல்லையாமே?”

"ஆமாம், அந்த ரூமைக் காலி பண்ணிட்டேன். இப்போ நான் தமிழ் போதினி பத்திரிகையிலேயும் இல்லே..."

"அதுக்கென்ன ஆயிரம் இடம் இருக்குது; நீங்க மட்டும் எனக்கு......"

"என்ன செய்யனும்?"

"இன்னும் ரெண்டு மாசத்திலே, நான் ஒரு ஆர்ட் எக்சிபிஷன் நடத்தப் போறேன். அதுக்கு உங்க படம் வேணும். புத்தர், காந்தி, தாகூர், பாரதியார்-இவங்க படமெல்லாம் எளுதிக் கொடுத்தீங்கன்னா, எக்சிபிஷன்லே வைக்கலாம். உங்களுக்கு இருக்கிற புகளும் பேரும் அதனாலே இன்னும் அதிகமாகும்."

"புகழும் பேரும் இருந்தாப் போதுமா? பொருள் வேணுமா?"

"கலைஞர்கள்கஷ்டப்படக் கூடாதுங்கறதுக்காகத்தானே முக்கியமா இப்படி ஒரு சித்திரக்காட்சி நடத்தறேன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/74&oldid=1305022" இலிருந்து மீள்விக்கப்பட்டது