பக்கம்:வழிப்போக்கன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77

 "பேரு?"

"சுந்தரம்."

"அடடே! நீங்கதானனா சுந்தரம்? உட்காருங்க, இப்படி. என் பேர் சோமசுந்தரம். மலேயா சோமும்பாங்க. இரண்டு பேருக்கும் ஏறக்குறைய ஒரே பெயர்தான். 'தமிள் போதினி' அட்டைப் படமெல்லாம் எளுதறது நீங்கதானா? ரொம்ப் நல்லாருக்குது. போன அட்டையிலே ஒரு பெண் ஈர உடையோடு இடுப்பிலே குடத்துடன் ஆற்றங்கரையிலே நிற்கிறாப் போல எளுதியிருக்கீங்களே, அந்தப் பெண் ரொம்ப அளகா இருக்காளே?”

அவன் சித்திரக்கலையை ரசிக்கிரறானா? அல்லது பெண்ணின் அழகை ரசிக்கிறானா? என்று புரியவில்லை சுந்தரத்துக்கு.

"நீங்க ஏன் புத்தகங்களை பிரசுரிக்கக் கூடாது?"

"பிரசுர லாயம் ஆரம்பிக்கச் சொல்றீங்களா? ஏன்... சிரிக்கிறீங்க? தமாஷாப் பேசறானேன்னு பார்க்கிறீங்களா? குதிரை லாயம் மாதிரி ஒரு சின்ன இடத்தைப் பிடிச்சு; அதுக்கு பிரசுரலாயம்னு போர்டு போட்டுடருங்களே? அதனுலேதான் பிரசுரலாயம்னு சொன்னேன்!"

"நீங்களும் அப்படி ஒரு லாயத்தை ஆரம்பிச்சுடுங்களேன்?"

"ஆரம்பிக்கத்தான் போறேன். நீங்கள் அட்டைப் படம் எழுதித் தருவீங்களா?"

"சந்தோஷமா எழுதித் தரேன்.”

"அதிகமாப் பணம் கொடுக்க முடியாது. புத்தகம் எளுதற ஆசிரியருக்கே நான் பணம் கொடுக்கப் போறதில்லே..."

"அப்படி எந்த ஆசிரியர் உங்களுக்குப் பணம் இல்லாமல் எழுதிக் கொடுப்பார்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/77&oldid=1305070" இலிருந்து மீள்விக்கப்பட்டது