பக்கம்:வழிப்போக்கன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

கிறாயே? முழம் என்னடி விலை?’ என்று கேட்டாள் சுந்தரத்தின் மனைவி.

"ஒரு துட்டம்மா!"

"அநியாயக்காரியடி, நீ! முழம் போடுகிற அழகைப் பார்; இன்னும் கொஞ்சம் விட்டுக் கிள்ளு!”

பூச்சரத்தை வாங்கிப் போய், சுவரிலே வைத்து நகத்தால் கீறி மூன்று துண்டாக்கினாள் அவள். ஒன்றை அம்மன் படத்துக்குச் சூட்டிவிட்டு, "தேவி, அவருக்கு நல்ல வழியைக் காட்டு, தாயே!” என்று மனமுருக வேண்டிக் கொண்டாள்;

இன்னொரு துண்டைத் தன் தாயிடம் தந்துவிட்டு, மற்றொன்றைத் தன் தலையில் வைத்துக் கொண்டாள்.

"என் நரைத்த தலைக்குப் பூ ஒன்றுதான் கேடு!... குழந்தை ஓயாமல் அழுகிறது; பசிக்கிறதோ, என்னவோ? வாசலில் போய்ப் பூக்காரியுடன் எத்தனை நேரம் பேச்சு? போய்க் குழந்தையை எடுத்துவிடு, போ!" என்று அதட்டினாள் தாய்.

குழந்தையை எடுத்து விட்டதும், தாய் கொடுத்த பலகாரத் தட்டுடன் சுந்தரத்தின் முன்னால் போய் நின்றாள் அவள்.

சஞ்சலத்துடன் காணப்பட்ட கணவனைப் பார்த்ததும் அவளுக்கு வேதனையாயிருந்தது. "ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்?" என்று கேட்டாள்.

"ஒன்றுமில்லை; நாளை நாலு மணிக்கு நான் புறப்படுகிறேன்!" என்றான் சுந்தரம்.

இன்னும் பத்து நாள் இருந்துவிட்டுப் போகிறேன் என்று சொன்னீர்களே, அதற்குள் என்ன நினைத்துக் கொண்டீர்கள்?"

"நான் வேலையில்லாமல் இருப்பது எல்லோருக்கும் கேவலமாக இருக்கிறது. சீக்கிரமே ஒரு வேலையில் அமர்ந்து உன்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/8&oldid=1304668" இலிருந்து மீள்விக்கப்பட்டது