பக்கம்:வழிப்போக்கன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

அழைத்துக் கொண்டு போய்க் குடித்தனம் போட்டால்தான் என் மனம் நிம்மதி அடையும்."

"இந்தக் கிராமத்துப் பீடைகளுக்கே வாய் அதிகம்; என் அத்தைக்கும் புத்தி கிடையாது. அவர்கள் ஏதோ சொல்லி விட்டார்கள் என்று நீங்கள் அவசரப்பட்டுப் போகவேண்டாம். உங்களை அனுப்புவதற்கே எனக்குச் சங்கடமாயிருக்கிறது."

"நான் லெட்டர் போடுகிறேன். இரண்டே மாதத்துக்குள் உன்னை அழைத்துக் கொள்கிறேன். நீ கண்கலங்காதே!”

மறுநாள் இரண்டரை மணிக்குள்ளாகவே புறப்பட்டு விட்டான் சுந்தரம். அவன் மாமனார்கூட எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். அவன் பிடிவாதமாக புறப்பட்டு விட்டான்.

கணவன் புறப்படும் சமயத்தில் ஒரு காகிதப் பொட்டலத்தைக் கொண்டுவந்து கொடுத்து, "இந்தாருங்கள், இதை வைத்துக் கொள்ளுங்கள்!" என்றாள் அவன் மனைவி.

சுந்தரம் அதைப் பிரித்துப் பார்த்தான். அதில் ஐந்து ரூபாய் நோட்டுக்கள் இரண்டும், ஒற்றை ரூபாய் நாணயங்கள் ஐந்தும் இருந்தன-பதினைந்து ரூபாய்.

"இது ஏது உனக்கு?”

"பிறந்த குழந்தையைப் பார்க்க வந்தவர்கள் ஆசீர்வாத மாகக் கொடுத்துவிட்டுப் போனார்கள். குழந்தைக்கு ஒரு வெள்ளி அரைஞாண் செய்து போடலாமென்று இருந்தேன். இந்தச் சமயம் அது உங்களுக்கு உதவியாயிருக்குமே என்று தோன்றியது. ஒட்டலில் சாப்பாட்டு டிக்கெட் புத்தகம் ஒன்று வாங்கிக் கொள்ளுங்கள்" என்றாள். சுந்தரத்தின் நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது.

'புறப்படும் சமயத்தில் கண்ணீர் விடக்கூடாது' என்று மனைவிக்கு ஆறுதல் கூறியவன், தன் துக்கத்தை அடக்கிக் கொள்ள முடியாமல் தவித்தான். குழந்தைக்குத் தன் கையால் அரைஞாண் வாங்கிப் போட வேண்டியது போக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/9&oldid=1304688" இலிருந்து மீள்விக்கப்பட்டது