பக்கம்:வழிப்போக்கன்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

வாழவேண்டுமோ? இந்தக் கிராமத்துப் பீடைகள் என்னை ஒயாமல் நச்சரித்துக் கொண்டு இருக்கின்றன.

சீக்கிரமே ஒரு சின்ன இடமாகப் பார்த்துக் குடித்தனம் வைப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள். பட்டினி கிடந்தாலும் கட்டிய புருஷனோடு வாழ்வதைத்தான் ஒரு பெண் சொர்க்க மாகக் கருதுவாள். தங்கள் பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்கு
காமு."

சுந்தரம் வேலைக்கு அமர்ந்து ஆறு மாதம் ஆகிவிட்டது.

சித்திரக் கண்காட்சி முடிந்த உடன் ஐந்நூறு ரூபாய் பணம் கொடுப்பதாகக் கூறியிருந்த மலேயா சோமு இப்போது அந்தப் பேச்சையே எடுப்பதில்லை. மாதம் நூறு ரூபாய் சம்பளம் தருவதாகச் சொன்னதுகூட வெறும் பசப்பு வார்த்தைகள்தான். வேலைக்குச் சேர்ந்தபோது முன் பணமாக நூறு ரூபாய் கொடுத்தானே, அவ்வளவுதான். அப்புறம் சுந்தரம் முழுசாகப் பத்து ரூபாய்க்கு மேல் பார்க்கவேயில்லை.

எத்தனையோ முறை கேட்டுக் கேட்டுச் சலித்துவிட்ட அவன் கடைசியில் பொறுமை இழந்தவனாய், "நூறு ரூபாய் சம்பளம் தருவதாகச் சொன்னீங்க, எக்சிபிஷன் முடிஞ்சதும் ஐந்நூறு ரூபாய் தருவதாகச் சொன்னீங்க. இப்போது இப்படி செய்யறீங்களே, இது நியாயமா?" என்று ஒரு நாள் கேட்டு விட்டான்.

"புத்தக வியாபாரம் 'டல்'லாயிருக்குதே, பார்த்துக்கிட்டுத்தானே இருக்கீங்க. எப்படி மொத்தமாகச் சம்பளத்தைக் கொடுக்க முடியும்? அட்ஜஸ்ட் பண்ணிக் கொஞ்சம் கொஞ்சமா வாங்கிக்குங்க" என்றான் மலேயா சோமு.

"இந்த மாசம் குடித்தனம் வைக்கலாம்னு இருக்கேன். வாடகைக்கு வீடு கூடப் பார்த்தாயிற்று. அதுக்கு இரண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/80&oldid=1305124" இலிருந்து மீள்விக்கப்பட்டது