பக்கம்:வழிப்போக்கன்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

"ஏனயா, மலேயாவிலிருந்து நீ தமிழை வளர்க்க வந்திருக்கயா வயிறு வளர்க்க வந்திருக்கயா?" என்று கேட்டுவிட்டுக் கோபமாகத் திரும்பிப் போய்விட்டான் சுந்தரம். அன்று போனவன்தான். அப்புறம் அந்தப் பக்கமே திரும்பவில்லை.

இப்போது மூன்று வருடங்களுக்குப் பிறகு, இராணிப் பேட்டைத் திடலில், மீண்டும் அதே சோமுவிடம் போய் நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டதே!

லமாரியில் உள்ள புத்தகங்களையெல்லாம் தாறு மாறாகத் தள்ளித் தள்ளி எதையோ தேடிக் கொண்டிருந்தான் சுந்தரம். அப்போது அவன் தேடாத பொருள் ஒன்று அவனுடைய கையில் சிக்கியது. நான்கு மாதங்களுக்கு முன் அவன் மனைவி எழுதிய கடிதம் அது. அந்தக் கடிதத்தை மறுபடியும் படித்துப் பார்க்க வேண்டும்போல் ஒர் எண்ணம் உதிக்கவே, பிரித்துப் படித்தான்:

"நமஸ்காரம். தங்கள் கடிதம் கிடைத்தது. அதைப் படித்தபோது நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். நம் குழந்தைக்கு ஆசீர்வாதமாகக் கிடைத்த பதினைந்து ரூபாயைக் கொண்டு அவனுக்கு ஒரு வெள்ளி அரைஞாண் செய்து போட வேண்டும் என்று ஆசையாயிருந்தேன். ஆயினும் தங்களுடைய கஷ்டத்துக்கு உதவுவதைக் காட்டிலும் வெள்ளி அரைஞாண் முக்கியம் அல்ல என்று கருதி, அந்தப் பணத்தைத் தங்களிடம் கொடுத்து, ஒட்டலில் சாப்பாட்டுப் புத்தகம் வாங்கிக் கொள்ளும்படி சொன்னேன். தாங்களோ அதைப் பாலாற்றங் கரையில் மறந்து வைத்து விட்டுப்போய் விட்டதாக எழுதியிருக்கிறீர்கள். பணத்தை மறக்கும் அளவுக்கு அப்படிப்பட்ட யோசனை என்னவோ? நல்ல வேளையாகக் கடவுள் ரொம்பவும் சோதிக்காமல் உடனே தங்களுக்கு ஒரு நல்வழி காட்டி விட்டார். வேலை கிடைத்தது பற்றி மிகவும் மகிழ்ச்சி. எப்போது என்னைச் சென்னைக்கு அழைத்துச் செல்லப் போகிறீர்கள்? தங்களைப் பிரிந்து எத்தனை காலம் தனியாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/79&oldid=1305100" இலிருந்து மீள்விக்கப்பட்டது