பக்கம்:வழிப்போக்கன்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97

"ஆமாம், காலில்தான் பலமான அடி. அது சரியாகி விடும். முதுகிலே பட்ட அடி இன்னமும் வலித்துக் கொண்டிருக்கிறது. கொழுக்கட்டைக்கு ஆசைப்பட்டேன் அல்லவா? அது முதுகிலே கிடைத்துவிட்டது! முதுகில் விழுந்த அடி அப்படியே கொழுக்கட்டை மாதிரி வீங்கிப் போய்விட்டது" என்றார் அவர்.

சுந்தரத்தின் இடது பக்கத்துக் கட்டிலிலே ஒரு கிரிமினல் கைதி படுத்திருந்தான். அவன் ஒரு குறவன். சுந்தரத்தைப் பார்த்து அவன் "சாமிக்கு எந்த ஊரோ?" என்று விசாரித்தான்.

"பட்டணம்.”

"என்ன வேலை செய்யறிங்க?"

"படம் எழுதறது."

“அடப் பாவமே! உங்க வலது கையை ஒடிச்சுட்டான் களே, இந்தப் படுபாவிங்க ...இனிமே எப்படிப் படம் எழுதப் போறிங்க?" வயிற்றெரிச்சலோடு கூறினான் அந்தக் குறவன்.

குறவன் நினைவு படுத்திய பிறகுதான் சுந்தரத்துக்குத் தன் வலது கையைப் பற்றிய கவலை ஏற்பட்டது.

'சாமிக்குக் குழந்தை குட்டிங்க இருக்குதா?”

"ம்...ஒரு பெண் குழந்தை இருக்குது என்றான் சுந்தரம்."

எனக்குக் கூட ஒரு பெண் குழந்தை இருக்குதுங்க. இப்ப என் பெண்ஜாதியும் அந்தக் குழந்தையும் என்ன கஷ்டப்பட முங்களோ?' என்று கண்ணிர் பெருக்கினான் குறவன்.

"உனக்கு என்ன தொழில்?" என்று கேட்டான் சுந்தரம்.

"திருட்டுத் தொழில்தானுங்க, சாமி; இந்த வயத்து வலியிலிருந்து நான் பிழைக்க மாட்டேனுங்க. எனக்கு நம்பிக்கையில்லை, சாமி! நீங்க கவலைப்படாதீங்க. என்னமோ உங்களைப் பார்த்ததிலிருந்து எனக்குப் பரிதாபமாயிருக்கு" என்று கூறிய குறவன், மெதுவாக எழுந்து சுந்தரத்தின்

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/97&oldid=1313614" இலிருந்து மீள்விக்கப்பட்டது