உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 வழி மேல் விழி வைத்து... தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோற்றம் கொண்டது. அந்தத் தோற்றத்திற்குப் பிறகுதான் எல்லோருக்கும் கல்வி வாய்ப்பு வேண்டும்; வேலைவாய்ப்பு வேண்டும் என்ற உரிமைக் குரல் விண் முட்ட எழுந்தது. அந்த உரிமைக் குரல்களின் முன்னோடிகளாக இருந்த திராவிட இயக்கத்தின் தலைவர்களை யாரும் மறந்து விட முடியாது. அவர்களுடைய உழைப்பின் வடிவம்தான் என் எதிரே அமர்ந்திருக்கின்ற பல்லாயிரக்கணக்கான ஆசிரியப் பெருமக்கள் என்று சொன்னால் அதை யாரும் மறைக்கவும் முடியாது; மறுக்கவும் முடியாது. அந்த இயக்கத்தின் தோன்றலாக இருக்கின்ற அரசுதான் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கழக அரசு என்பதை நீங்கள் மறந்து விட மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். னது. கோத்தாரிக் கல்விக் குழு ஒரு கருத்தைச் சொன் "இந்திய நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளிலே தீர்மானிக்கப் படுகிறது." என்று! தந்தை பெரியார் அவர்கள் உங்களைப்பற்றி ஒரு கருத்தைச் சொன்னார் - “நாடு மக்களால் உருப்படுகிறது; மக்கள் ஆசிரியர்களால் உருப்படுகிறார்கள்' என்று தந்தை பெரியார் சொன்னார். பேரறிஞர் அண்ணா அவர்கள், "ஆசிரியர் கள் இன்று ஏங்கினால் நாளைக்கு நாடு ஏங்கும்" என்று சொன்னார் கள். இவர்கள் வழிநின்றுதான் இன்றைக்கு நானும், கல்வி அமைச்சர் பேராசிரியர் அவர்களும் உங்களுக்காக தொண்டாற்றிக் கொண்டிருக்கின்றோம்; பணி புரிந்து கொண்டிருக்கின்றோம். பப உங்களுடைய தேவை எந்த அளவிற்கு இந்த அரசினால் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதையெல்லாம் கருதிப் பார்த்துத்தான் இடைநிலை ஆசிரியர்களாக தேர்வு செய்வதிலே கூட, நியமிக்கப்படுவதிலேகூட, இருந்த தொல்லைகளை எல்லாம் - நீங்கள் உங்கள் சங்கங்களின் சார்பாக எங்களுக்கு எடுத்துரைத்த நேரத்தில் வேலை வாய்ப்பு அலுவலகங்களிலே பதிவு பெற்றவர் களின் முன்னுரிமை அடிப்படையிலேதான் இடைநிலை ஆசிரியர்