உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 வழி மேல் விழி வைத்து... இருப்பது என்னுடைய வலிமையால் அல்ல. உங்களுடைய தாங்குதலால் (கைதட்டல்) நான் விழாமல் இருப்பேன் என்ற நம்பிக்கை. அதைத்தான் இங்கே தம்பி பீட்டர் அல்போன்ஸ் சொன்னார். அவர் ரொம்ப பேராசையோடு சொன்னார். நூறாண்டு காலம் நானே முதலமைச்சராக இருக்க வேண்டுமென்று அவர் மிகவும் பேராசைப்பட்டார். இயற்கை ஒவ்வொருவருக்கும் ஒரு கால வரம்பை நிர்ணயித்திருக்கின்றது. ஆனால், அந்தக் கால வரம்பிற்குள்ளாக அவர்கள் ஆற்ற வேண்டிய கடமையை ஆற்ற வேண்டும் என்பதைத்தான் அது இந்து மதம் ஆனாலும், கிறித்துவ மதம் ஆனாலும், புத்த மதம் ஆனாலும், இஸ்லாமிய மார்க்க மானாலும் அத்தனையும் அதைத்தான் நமக்கு கோடிட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றன. அந்தக் கடமையை நாம் ஆற்றியாக வேண்டும். அந்தக் கடமையைச் செய்கின்ற நேரத்தில் நம்முடைய உள்ளத்திலே எத்தகைய தூய்மை இருக்க வேண்டும் என்பதனை இங்கே வெளியிடப்பட்டுள்ள வெள்ளி விழா மலரில் நான் கண்டேன். விளிம்பு கட்டி, அந்த அருமையான மொழிகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள். “கடவுள் நம்பிக்கையும் பக்தி முயற்சிகளும் கண்மூடித் தனமான செயல்களால் கேலிக்குள்ளாகி வருகின்றன குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியாது ஆன்மீகக் குருடர்களால், ஆன்மீகம் சிதைந்து போகும்; இதனால் மதம் மதிப்பிழந்து போகிறது மனிதம் சிதைந்து போகிறது. நமது தவறான வாழ்க்கை முறைகளால் பது க மனிதம் சிதைந்து போகின்றது சிந்தியுங்கள்!"s