உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர். மு. கருணாநிதி 111 என்ற இந்தப் பொன்மொழி வெள்ளிவிழா மலரிலே விளிம்பு கட்டி வெளியிடப்பட்டிருப்பதை நான் படித்துப் பார்த்தேன். க அந்த மலரிலேயே அன்னை வேளாங்கண்ணியைப் பற்றிக் குறிப்பிடும்போது- "அன்னை மரியாளின் சிறப்பு, இயேசுவைப் பெற்றெடுத்தது என்பதோடு முற்றுப்பெறவில்லை கே கருவுற்ற எலிசபெத்துக்கு ஓடிச்சென்று மருத்துவச்சியாக பணியாற்றியதும் - ஏழைத் தம்பதியர் குறை போக்க இயேசுவை அணுகிய செயலும் றான் இயேசு சிலுவையிலே அறையப்பட்டவுடன் சிலுவையின் அடியிலே துணிவோடு நின்று தைரியமாக சமாளித்த அந்தச் சிறப்பும் கணைராக குக் விவிலியம் கூறுவதுபோல அன்னை மரியாளின் சிறப்பாகும்." அந்த உறுதி, துணிவு, தாய்மை, பாசம், இவைகளோடு நாம் நம்முடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது தான் அன்னை வேளாங்கண்ணி ஆலய வெள்ளிவிழா நேரத்திலே நாம் மேற்கொள்ள வேண்டிய சூளுரையாகும். சிலர் கேட்கலாம். நாங்கள் அழைத்தால் வர மறுக்கிறாய்? இஸ்லாமியர் அழைத்தால் செல்கிறாய்; கிறித்தவர்கள் அழைத்தால் செல்கிறாய்; என்று கேட்கலாம்.. நாங்கள் என்பது நீங்கள் வேறு, நாங்கள் வேறு என்று எண்ணுகிற நேரத்தில்தான் நாங்கள் என்ற சொல்லுக்கு பொருள் உண்டு. TUB நாங்கள் என்பதிலே - நான் என்னை தமிழன், திராவிடன் என்று சொல்லிக்கொண்டாலுங்கூட, அவர்கள் சொல்வதைப்போல