உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர். மு. கருணாநிதி 157 நேரத்திலே கூட - தன்னுடைய உயிர் இனி நிலைக்கப் போவ தில்லை; என்றுதானே உணர்ந்த அந்தச் சூழலிலே கூட அண்ணா அவர்கள் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார் என்பதைச் சொல்வதற்குக் காரணம், இன்றைக்கு புத்தகங்களைப் படிப்பதே ஒரு அலுப்பான விஷயம்; தேவையற்ற வேலை; என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற இளைய தலைமுறைக்கு இந்தச் செய்தி எட்ட வேண்டும் என்பதற்காகத்தான் அடையார் மருத்துவமனையிலே அறுவை சிகிச்சைக்குச் செல்கின்ற அந்தக்கணம் வரையிலே புத்தகம் படித்துக் கொண்டிருந்த அண்ணா அவர்களின் செயலை நான் நினைவூட்ட வேண்டியவனாக இருக்கிறேன். ஈக்ற இ இங்கே நல்லி பேசும்போது சரஸ்வதி மகாலைப் பற்றியெல் லாம் சொன்னார். நூல் நிலையங்களைப் பற்றி நாம் எண்ணுகிற நேரத்தில் பல இலக்கியங்கள், பல காப்பியங்கள் எல்லாம் இன்றைக்கு அழியாமல் காப்பாற்றப்படுவதற்குக் காரணமாக இருந்த இரண்டு சான்றோர்களை நாம் மறந்து விட முடியாது. தாமோதரனார், உ.வே. சாமிநாதய்யர் என்ற இந்த இரண்டு பெரியவர்களும் நூல்களை - பழைய ஏடுகளை - சுவடிகளை தேடி அலைந்து எவ்வளவு சிரமப்பட்டார்கள்! எதற்காக? அவர்கள் படித்து மகிழ்வதற்காகவா? அல்ல. தாங்களும் படித்து, எதிர்காலச் சமுதாயமும் அதைப் படிக்க வேண்டும், பழைய இலக்கியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும், என்ற உணர்வோடு அவர்கள் அரும்பாடுபட்டு அவைகளையெல்லாம் திரட்டித் தந்தார்கள். இல்லாவிட்டால் இன்றைக்கு பளபளப்பாக அச்சு வாகனம் ஏறி நம்முடைய கண்களுக்கும் கருத்துக்களுக்கும் விருந்தாக இருக்கின்ற பல இலக்கியங்கள் நமக்குக் கிட்டாமலே போயிருக் கும். அத்தகைய பெரியவர்களை எல்லாம் இதுபோன்ற விழாக் களிலே நாம் நினைவு கூர்வது அவர்களுக்கு நாம் செலுத்துகின்ற நன்றிக்கடனாகும். ை