உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 வழி மேல் விழி வைத்து.. பொருள்களுக்கும் தரப்படும் நிலைமாறி புத்தகசாலைக்கு அந்த இடம் தரப்படவேண்டும். உணவு, உடை, அடிப் படைத் தேவை. அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தான தும், முதல் இடம், புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும். எவ்வளவு செலவு? ஏது அவ்வளவு பணம்? என்று கேட்பர். பலருக்குத் தேவையான அளவு புத்தகம் வாங்கத்தான் முடியாது - இந்தக் குறையைப் போக்க பொதுப் ப் புத்தக சாலைகளை நடத்தி, சர்க்கார், நகர சபைகள், பொதுநலக் கழகங்கள் பணிபுரிய வேண்டும். ஆனால் சில அடிப்படை அறிவுக்குத் தேவையான புத்தகங்களையாவது, வீடு களில் சேகரித்துப் பயன்படுத்தும் முறை இருக்க வேண்டும். 5 பக் கா வீட்டிற்கோர் புத்தகசாலை அமைக்க வேண்டும். மக்களின் மனத்திலே உலக அறிவு புக வழி செய்ய வேண்டும். நிபுணத்துவம் தரும் ஏடுகள் கூட அல்ல - அடிப்படை உண்மைகளையாவது அறிவிக்கும் நூல்கள் சிலவாவது வேண்டும். வீடுகளிலே நடைபெறும் விசேஷங்களின்போது, வெளி யூர்கள் சென்று திரும்பும்போது, பரிசளிப்புகள் நடத்தும் போது, புத்தகங்கள் வாங்குவது என்று ஒரு பழக்கத்தைக் கொஞ்சம் வசதியுள்ள வீட்டார் சில காலத்துக்காவது ஏற்படுத்திக் கொண்டால், சுலபத்தில் ஒரு சிறு புத்தக சாலையை அமைத்து விடலாம். உலக அறிவை, உருப்படியான காரியத்துக்குப் பயன் படும் அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும். பழைய முறைகளையும் எண்ணங்களையும் ம் மேலும் ஊட்டக்கூடிய ஏடுகளைச் சேகரித்து அதற்குப் புத்தகசாலை என்று பெயரிடுவது, குருடர்களைக் கூட்டி வைத்து, அவர்கள் உள்ள இடத்துக்கு, வழிகாட்டுவோர்