பக்கம்:வழுக்கு நிலம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 165 என்று இருந்தேன். இப்பொழுது யார் என்னைச் சட்டை செய்கிறார்கள் ? எல்லாம் கூடப் பிறந்தவர்களுக்குக் கலியாணம் ஆகிவிட்டால் உடன் பிறந்தவளைக் கவனிக்க மாட்டார்கள்.” ஏதோ அந்த அம்மையார் தன் கதையையே சொல்வது போல இருந்தது. "அது எல்லாம் இல்லை. ஏன் திடீர் என்று வந்தாய் என்று கேட்டால் என்ன சொல்வது என்று சிந்திக்கிறேன்." "சரிதான். புருஷனை மனைவி சந்திக்கிறதுக்கு முன் கூட்டித் தெரிவிக்க வேண்டுமா! நல்லாயிருக்கிறது நீ சொல்வது. நீ அதற்குக் கவலைப் படாதே. நாங்கள்தான் வரவழைத்தோம் என்று சொல்லுகிறோம். இரண்டில் ஒன்று தெரிய வேண்டும். இந்த மாதிரி தவறான நடத்தையையுடைய குடித்தனம் எங்களுக்கு வேண்டியதில்லை" என்று மீண்டும் மீண்டும் தன் முடிவை எடுத்துரைத்தாள். அவர்களிடத்தில் தன் வாழ்வின் கதையை எடுத்துச் சொல்லி ஆறுதல் பெறலாமா என்று எண்ணியது அவள் உள்ளம். 'சே' என்ன இருந்தாலும் குடும்பக் குறைகளைப் பிறருக்கு எடுத்துச் சொல்வது தவறு என்று அவள் அறிவு உணர்த்தியது. "இல்லே'ம்மா தனியாக வந்தாயே என்று அவர் கேட்டால் என்ன சொல்வது” என்று வேறு விதமாகப் பதில் அளித்தாள். : 'அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. அப்பா வரமுடியவில்லை என்று சொல்வது." "சரி. நான் இருக்கிறேன்மா. ஆனால் நான் இங்கே இருந்தால் அவர் திருந்துவார் என்று சொன்னர்களே அதிலே எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை" என்று மனம் விட்டுப் பேசி விட்டாள். பிறகு அதுகூட ஏன் பேசினோம், அவ்வாறு பேசியிருக்கக் கூடாது என்று எண்ணினாள். பிறகு எழுந்து கொண்டுவந்த துணிப் பையை அவர்கள் காட்டிய ஒரு தனியறையில் வைத்து விட்டு பஸ்ஸில் வந்த தூசுபோகக் குளிக்கச் சென்றாள். அவர்கள் பேச்சு முடிந்தது என்று தெரிந்ததும் அந்த வீட்டுக்காரர் உள்ளே வந்தார். "என்ன...எல்லாம் எடுத்துச் சொன்னாயா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/167&oldid=898130" இலிருந்து மீள்விக்கப்பட்டது