பக்கம்:வழுக்கு நிலம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 ) ரா. சீனிவாசன் "ஏன்'மா, இன்னும் மோர் சாப்பிடாமல் வைத்திருக்கிறாய்? குடிம்மா வந்த களைப்புத் தீரும்." வெள்ளிக் குவளையில் இருந்த மோரைக் குடித்தாள். "நன்றாக இருக்கிறது. நல்ல மணம்." "ஆமாம், அதிகமாகப் புளித்திருக்காது. வெயிலில் அவர் அடிக்கடி மோர் வேண்டும் என்பார். அதற்குத்தான் அதை அளாவி வைப்பது." . "நீங்கள் வீட்டை மிகவும் சுத்தமாக வைத்திருக்கிறீர்கள்." "அதுதான் எங்களுக்கும் பிடிக்கவில்லை. இந்த வீட்டுச் சாமான்களைக் கலைக்க ஒரு குழந்தை இல்லை. அதுதான் எங்களுக்குக் கவலை. ஆண்டவன் கண் திறந்து பார்க்கவில்லை.” "சிலருக்கு அளவுக்கு மீறிக் குழந்தைகள் பிறக்கின்றன." மாலையில் அவர் வந்ததும் எப்படிச் சந்திப்பது யார் உன்னை வரச்சொன்னது என்று அவர்கள் முன்னால் எரிந்து விழுந்தால் என்ன செய்வது என்று எண்ணினாள். அவர்கள் முன்னால் எரிந்து விழ மாட்டார் அக்கம் பக்கத்திற்கு அஞ்சியாவது கொஞ்சம் பண்பாடுடன் நடந்து கொள்வார். மேலும் அவர்களிடமும், ஒரளவு தன்னைப் பற்றிச் சொல்லி இருப்பதால் அவ்வளவு தூரம் எரிந்து விழமாட்டார் என்று தனக்குள்ளே பார்வதி ஆறுதல் கொண்டாள். சிவராமனைப் பார்க்கவேண்டும், பார்த்துவிட்டுத்தான் போகவேண்டும் என்ற ஆசை அவளை அங்கேயே இருக்கத் தூண்டியது. மேலும், மீண்டும் ஊருக்குப் போவதால் தன் எதிர்கால வாழ்வு என்னாகும்? என்ற அச்சம் அவளைத் திரும்பிப் போகத் தடுத்தது "ஒருக்கால் அவர் நன்மைக்காவது நான் இருக்க வேண்டி வந்தாலும் வரும். நானில்லா விட்டால் வீட்டைக் காலி பண்ணச் சொன்னால் அவர் நிலைமை என்ன ஆகும்? அதற்காகவாவது நான் இருந்தால் அவருக்குப் பயன்படமுடியும்" என்று சுயநலமற்ற தன்மையிலும் அவள் மனம் எண்ணியது. "ஏன்'மா என்ன யோசிக்கிறே? நாங்கள் உன்னை வரவழைத்தது தவறா? இல்லாவிட்டால் உன்குடி முழுகிப் போய்விடும். பட்டிக் காட்டிலே அப்பா அம்மாவை நினைத்துக்கொண்டு நீ அங்கே இருந்தால் அவர் இங்கே தனியாகக் கெட்டுப் போகமாட்டாரா? நான் கூடத்தான் அந்தக் காலத்தில் கலியாணம் ஆன புதிதில் அம்மா வீடே கதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/166&oldid=898128" இலிருந்து மீள்விக்கப்பட்டது