பக்கம்:வழுக்கு நிலம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 0 ரா. சீனிவாசன் நான் உங்களைத் திருமணம் செய்து கொள்ளவே விரும்பினேன். காதல் கனிந்து மணம் எனும் கட்டால் சிறப்புறுவோம் என்று கனவு கண்டேன். ஆனால் உங்கள் அறையில் இருந்த படம் என்னிரண்டு கண்களையும் திறந்து விட்டது. நான் செல்லும் பாதை தவறானது என்பதை உணர்த்தியது. அழகு, நிறை இரண்டும் பெண்களின் இரண்டு கண்கள். என் வெளித் தோற்றத்தை மட்டும் தான் உங்களால் காண முடிந்தது. என் உள்ளத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் உங்களுக்கு இக் கடிதம் வரைகிறேன். பெண்கள் உங்கள் சூதாட்டத்தின் கருவிகள் அல்ல. உண்மையில் உங்களோடு பழகிய எனக்கு ஏதேனும் நன்மை செய்யவேண்டும் என்று நினைப்பீர்களானால் உங்கள் மனைவியை அழைத்து வந்து செம்மையாக வாழ்க்கை நடத்துங்கள். அதுவே நீங்கள் என்னிடம் வைத்துள்ள அன்பிற்கு அறிகுறியாகக் கருதுவேன். பெண்கள் உரிமையாக வாழ வேண்டும் என்பதுதான் என் குறிக்கோள். தொழில் செய்தாலும் சரி, நீங்கள் சொல்வது போல் நடிகைத் தொழிலுக்கு நான் சென்றாலும் சரி, நான் வாழ்க்கையில் தவற மாட்டேன் என்பதை உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன். மறுபடியும் உங்களைச் சந்திக்க விரும்பவில்லை. அதனாலேயே நான் வேலையை இராஜிநாமா செய்து விட்டேன். முறிந்து விட்ட காதலால் நான் மனம் முறியவில்லை. வாழ்க்கை, அனுபவத்தின் அடிப்படைமீதுதான் அமைவது. உங்கள் வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொண்டால் அதுவே என்னோடு பழகிய அனுபவத்தின் பயனாகும் என்று கருதுகிறேன். இப்படிக்கு உண்மையுள்ள 'சாரதா "ஆம், அவள் பெயர் சாரதாதான். அவளைக் கண்டது வெறும் காட்சிதான். அதைப்பற்றி உலகம் தெரிந்து கொண்டதும் கேள்விதான். பழகித் தெரிந்து கொண்டது தான் உண்மை" என்று விளக்கம் கூறி முடித்தான். []

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/174&oldid=898146" இலிருந்து மீள்விக்கப்பட்டது