பக்கம்:வழுக்கு நிலம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 'வழுக்கு நிலம் இது ஒரு நிகழ்ச்சிச் சித்திரம். ஒரே ஒரு நிகழ்ச்சி, அதை மையமாக வைத்து எழுதப்பட்டது. மணமான வாழ்வு; அதன் சீர்குலைவுக்கு வரவுக்கு மீறிச் செலவு செய்வது; அதனால் அன்பு சிதைகிறது. பெண் கணவனின் வருவாய்க்குத் தக்கபடி வாழவேண்டும். அதுதான் குடும்பம் மகிழ்வு கொள்வதற்கு வழி என்றார் வள்ளுவர். பெண்கள் சிக்கனமாக வாழ்கிறார்கள்; தவறு செய்பவர் இந்தக் கதையில் கணவன்தான். கடன் வாங்குவது அது ஒரு தீய பழக்கம்; அதை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை இது. இதில் வரும் சிவராமன் உண்மைப் பாத்திரம் என்று கூறினால் அது மிகையாகும்; அப்பாத்திரம் உண்மை; இப்படியும் வாழ்கிறார்கள் என்பது உண்மை. அவன் வழுக்குகிறான்; ஆனால் விழவில்லை; நிமிர்ந்து வாழ்கிறான். அதைச் சித்திரிக்கும் கதை. இது இரு முறை பல்கலைக்கழகத்தில் பட்ட வகுப்புக்குப் பாடமாக வைக்கப்பட்டது. இலக்கியத் தரம் வாய்ந்த எழுத்து என்பதால் மதிக்கப்பட்டது. இதன் சிறப்புக்கு நடை அடிப்படை, தூய தமிழில் எளிய சொற்களைக் கொண்டு நடைமுறை வாழ்க்கையைச் சித்திரித்துத் தருகிறது. எழில் மிக்க நடை என்ற பாராட்டைப் பெற்றுள்ளது. நிகழ்ச்சிச் சித்திரம். ரா. சீனிவாசன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/6&oldid=898237" இலிருந்து மீள்விக்கப்பட்டது