பக்கம்:வழுக்கு நிலம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 0 ரா. சீனிவாசன் "நீங்கள் எங்கே சார் போகவேண்டும்?" "அமைந்தகரைக்கு இரண்டு டிக்கட் கொடுங்கள்." "வேண்டாம். ஒன்று தாசப்பிரகாசுக்குக் கொடுங்கள்." இரண்டு தனி டிக்கெட்டுகள் வாங்கப்பட்டன. "ஏன். மாணிக்கம்! வீட்டுக்கு வா! தங்கிப்போகலாம்.” "நீங்கள் கட்டாயம் திருமணத்திற்கு வருவதாக இருந்தால் நானும் வருகிறேன்." "என்னை வற்புறுத்த வேண்டாம்." "அதைத்தான் நானும் உங்களுக்குச் சொல்வது. என்னையும் உங்கள் வீட்டுக்கு வரச்சொல்லி வற்புறுத்த வேண்டாம்.” அதற்குள் பஸ் பழைய டிராம் ஷெட்டைக் கடந்து சென்றது. அதைத்தள்ளி அடுத்த நிலையத்தில் நின்றது. இரண்டு இளங் கிறித்துவப் பெண்கள் இறங்கி விடுதி நோக்கி நடந்தனர். அவர்கள் இருந்த இடத்தைக் கொஞ்சம் கனத்துப் பருத்த உடம்புடைய வடநாட்டுக்காரி ஒருத்தி பிடித்துக் கொண்டாள். வயது ஐம்பதானாலும் வெண் நரை மறைக்கக் கறுப்பு நிறம் தீட்டி இருந்தமை அவள் ஜாக்கெட்டின் கழுத்தில் பட்டிருந்த செம்பட்டை நிறக்கறை காட்டியது. பஸ் நகர்ந்தது. இன்னும் சிறிது நேரத்தில் தாசப் பிரகாஷ் வரக் காத்துக் கிடந்தது. "என்ன! கடைசி முறையாகக் கேட்கிறேன். கட்டாயம் நீங்கள் திருமணத்திற்கு வரவேண்டும்." "இறுதியாகச் சொல்கிறேன். அந்தத் திருமணத்திற்கு நான் வரத் தேவையில்லையென்று" இவர்கள் பேசும் குரல் கொஞ்சம் அதிகமாகியது. அக்கம்பக்கத்தினரின் செவிகள் கூர்ந்து கேட்கலாயின. அதனால் நாவடக்கம் தானாக மேற்கொள்ள வேண்டியதாயிற்று. கார்கள் சில வெளியே காத்துக் கிடந்தன. மின்சார விளக்குகளின் பேரொளி கட்டிடத்தை அலங்கரிக்க, வெண் சட்டை அணிந்த காவலாளி காத்துக் கிடக்கத் தாசப் பிரகாஷ்' தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தது. "நான் வருகிறேன்” என்று கூறி அருகில் சிறிது தூரம் பஸ் தள்ளி நின்றதும் கீழே இறங்கினான் மாணிக்கம். கையிலிருந்த துணிக் கட்டை வெளியே நின்று கொண்டிருந்த சிறுவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/94&oldid=898314" இலிருந்து மீள்விக்கப்பட்டது