பக்கம்:வழுக்கு நிலம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 91 'ம்....ம். அதெல்லாம் தபாலாபீஸார் கடமையைச் சரியாகச் செய்கிறார்கள்.” "கட்டாயம் வரவேண்டும். அதுவும் உன்னை நேரில் பார்த்துச் சொல்லிவிட்டுப் போகவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் பட்டணம் வந்தேன். வழியிலேயே உன்னைச் சந்திக்க முடிந்தது.” "சொல்லவேண்டியது சொல்லியாகிவிட்டது. ஆபீசில் எவ்வளவோ வேலை. அன்றைக்கு விடுமுறை கிடைக்கும் என்று சொல்லுவதற்கில்லை.” . "கல்யாணம் ஞாயிற்றுக்கிழமைதான். மூன்றாவது சனிக்கிழமை வேறு விடுமுறை. அடுத்த நாள் திரும்பி விடலாம். கட்டாயம் வந்தாக வேண்டும்.” "என்னை வற்புறுத்தாதே. ஆபீஸில் நிறைய வேலை. வீட்டிலிருந்தேனும் செய்தாக வேண்டும்.” "அதற்கென்ன. அந்தக் கட்டுகளை ஊருக்குக் கொண்டு வந்தால் அங்கே நிதானமாகப் பார்த்துச் செய்து கொண்டால் போகிறது.” ஏறுவதற்கு மனமில்லாமல் சுவர் ஒரத்தில் சாய்ந்து கொண்டு நின்ற பஸ் கண்டக்டர் காலம் அவனைத் தள்ள அவன் பஸ்ஸில் ஏறியதும் கையில் வைத்திருந்த டிக்கெட்டுகளை ஒழுங்காக அடுக்கி வைத்துக்கொண்டான். டிரைவரும் முன்சீட்டில் ஏறி உட்கார்ந்துகொண்டு புறப்படக் கண்டக்டரின் கட்டளையை எதிர்பார்த்த வண்ணம் அசதியாகச் சாய்ந்துகொண்டிருந்தான். போகும் இடம் கேட்டு டிக்கட் கொடுக்கத் தொடங்கினான். நீதிமன்றத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த கருப்புச் சட்டைக்காரர்கள் சிலர் பஸ் நோக்கி வந்தார்கள். ஆபீஸில் நாள் முழுதும் வேலை செய்து அலுத்துப்போன குமாஸ்தாக்களும், சைனா பசாரில் சாமான் வாங்கிக்கொண்டு வீடு திரும்பும் குடும்பஸ்தர்களும் இன்னும் பல்வேறு தொழில் செய்யும் வீடு திரும்ப விழையும் தொழிலாளர்களும் ஏறி இடம் பிடித்தனர். கண்டக்டரின் அனுமதியின் பேரில் பஸ் அந்த இடத்தை விட்டு ஐந்து மைல் வேகத்தில் நகரத் தொடங்கியது. பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட தனி இடம் தவிர மற்றைய இடம் எல்லாம் நிரம்பிவிட்டது. அடுத்த நிலையம் வந்தது. மீண்டும் விழுந்தடித்துக் கொண்டு இடம் பிடித்தவர்கள் கைப்பிடியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு நின்றார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/93&oldid=898312" இலிருந்து மீள்விக்கப்பட்டது