பக்கம்:வழுக்கு நிலம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 ( ரா. சீனிவாசன் சாரதாவின் தோற்றம் சாரதாவையும் சிவராமனையும் மாறி மாறிப் பார்த்தன அவன் விழிகள். கூட்டத்தின் மறைவில் அவ்வுருவம் மறைந்துவிட்டது. சிறிது நேரம் பின் தொடரவும் செய்தது. அவர்கள் பின்னாலேயே நடந்தது அத்தனியுருவம். வழக்கம் போல், பஸ் நிலையத்தை அடைந்தார்கள். சாரதாவின் வருகையை அறிந்த பஸ் டிரைவர் போகத் துடித்துக் கொண்டு இருந்த பஸ்ஸைச் சிறிது நிறுத்தி அவள் ஏறிய பிறகு, "சரி போய்த் தொலை" என்று சொல்லுபவனைப் போல் அமுக்கி வைத்திருந்த விசையை நெகிழவிட்டான். சிவராமனும் அந்த இடத்தை விட்டுப் பதினைந்தாம் எண் நிலையம் நோக்கி நடந்தான். அந்த நிலையத்தில் இவனுக்காகக் காத்துக் கிடந்தது 'சிவப்புப் பெண்’. "அடேயப்பா! இந்த பஸ்ஸுக்கு சிவப்புப் பெண் என்று பெயர் வைத்திருக்கிறானே" என்று அந்த மேதாவிகளைப் பாராட்டத் தொடங்கினவனைப் போலச் சிறிது நேரம் அதில் இடமின்மையைக் கடிந்து கொண்டான். இவனைப் பின்தொடர்ந்த உருவம் இவன் ஏறிய பஸ்ஸில் ஏறி இவன் பக்கத்தில் உட்காரத் தொடங்கியது. "என்ன மாணிக்கம்! எப்போது வந்தாய்...?” "நான் காலையில் வந்தேன். ஹோட்டல் தாசப் பிரகாசில் தங்கி இருக்கிறேன்." "ஏன்.? வீட்டுக்கு வரக் கூடாது?" "வீட்டில் நீ இருக்க மாட்டாய் என்றுதான் வரவில்லை. கலியாணத்திற்குத் துணி எடுக்க வந்தேன். எதிர்பாராத விதமாக...” "என்ன. ஏதாவது விபத்து ஏற்பட்டுள்ளதா?” "இல்லை உன்னைச் சந்தித்தேன்." "சரி, வீட்டுக்குப் போகலாம். உட்காரு.” "இல்லை. வழியில் தாசப் பிரகாசில் இறங்கி விடுகிறேன். இரவு எட்டுமணி வண்டிக்குப் போய்விடலாம் என்றிருக் கிறேன். இதோ, இதுதான் நான். வாங்கிய துணிகள்" என்று கூலியாள் சுமக்க முடிந்து கொண்டு வந்த ஒரு சிறு மூட்டையைக் காட்டினான். "பரவாயில்லை! வீட்டுக்கு வந்து போகலாம்.” "நான் எழுதிய கடிதம் வந்ததா...?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/92&oldid=898310" இலிருந்து மீள்விக்கப்பட்டது