பக்கம்:வழுக்கு நிலம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 0 89 ஒன்றாகப் போகமாட்டார்கள் என்று அவன் கண்ட அனுபவம் அவனுக்கு அறிவுறுத்திற்று. "சாரதா! நீதான் என் மனக் கவலை மாற்றும் மருந்தாக விளங்குகிறாய்." "அத்தகைய பாக்கியம் நான் பெற்றிருந்தால்." "ஏன்! நீ நேற்றுப் பணம் கொடுத்து உதவாதிருந்தால் என் நிலைமை என்ன ஆகியிருக்கும்?" அப்பொழுதுதான் அவள் தன் நிலையை ஒருவாறு உணரத் தொடங்கினாள். அவசரப்பட்டால் எதுவும் கெட்டு விடும் என்று பழகிப் போன கருத்து அவளைத் தொடர்ந்து பேசாமல் தடுத்தது. தொடர்ந்து பேசாவிட்டாலும் அவனைப் பின் தொடர்ந்து நடப்பதில் அவள் பின்வாங்கவில்லை. வழக்கம் போல் அவர்களைப் பிரிக்கும் பஸ்நிலையம் வந்தது. சிவராமனும் சாரதாவும் நெருங்கி நடந்த நடையைக் கண்டால் யாரும் இவர்கள் கணவன் மனைவியர் என்று சொல்லாதிருக்க மாட்டார்கள். ஆனால், அவள் கழுத்தில் இல்லாத தாலியால் அவர்கள் இளங் காதலர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று கதை படிப்பவர்கள், சினிமா பார்க்கிறவர்கள் நிச்சயம் முடிவு கட்டிவிடக் கூடிய நிலையில் இருந்தார்கள். உரிமையோடு ஆண்களோடு பெண்களும் சரிசமானமாக நடப்போம் என்று நடக்கும் கணக்கற்ற தம்பதிகளில் இவர்களும் ஏன் ஓர் இணையாக இருக்கக் கூடாது? என்று சிலர் எண்ணக்கூடும். ஆனால், நாணம் அச்சம் என்பது எல்லாம் வெறும் மடவார்க்கே என்ற கொள்கையோடு நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும் கொண்டவளாக விளங்கினாள் சாரதா. உடம்பை மூடுவதைத் தன் முழுக் கடமை எனக்கொண்டிராத அவள் உடுத்தியிருந்த 'சில்க்' புடைவை அவள் கவர்ச்சிக்குக் காரணமாயிருந்தது. சுற்றி நடந்தவர்களிடம் ஒரு விழிப்பை உண்டு பண்ணியது. அவள் சென்று மறையுமட்டும் அவளையே ஒரு சிலர் பார்க்காமல் பார்த்தனர். அந்தப் பார்வையில் எதிர் எதிராக வந்த இரண்டு வாலிபர்கள் மோதிக் கொள்ள வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. “ஸாரி” என்ற சொல் இருவரையும் சமாதானம் செய்து வைத்தது. அங்கிருந்த துணிக் கடையிலிருந்து வெளி வந்து கொண்டிருந்த ஒரு வாலிபன் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து அவன் ஆராய்ச்சியையும் தூண்டிவிட்டது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/91&oldid=898309" இலிருந்து மீள்விக்கப்பட்டது