பக்கம்:வழுக்கு நிலம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 ( ரா. சீனிவாசன் 'ஆபீஸ் பியூன் வழக்கம் போல் குறிப்பேடுகளைக் கொண்டு வருவதும் போவதுமாய் இருந்தான். மானேஜர் கூப்பிடும் மணி ஓசைக்கு, உள்ளே செல்வதும் ஓரிரண்டு குறிப்பேடுகளைக் கொண்டு வருவதுமாக இருந்தான். அவன் உள்ளே போனாலும், வெளியே வந்தாலும் அவன் கையிலிருந்த பத்திரிகை, அடக்க ஒடுக்கமாக அவன் உட்காரும் பெஞ்சியின் கால்களினிடையே விழுந்து கிடந்தது. அவ்வப் போது அதை எடுத்துப் பிரித்துப் படிப்பதும் மூடி வைப்பதுமாக இருந்தான். அதில் இருக்கிற அத்தனைச் செய்திகளையும் படித்துவிட்டதால் மீண்டும் படிக்க வேறு ஒன்றும் இல்லாததால் அதையே திருப்பித் திருப்பிப் புரட்டினான். ஏதாவது படிக்காமல் விட்டுவிட்டோமா என்ற சந்தேகத்தோடு அதை மீண்டும் மீண்டும் புரட்டிப் பார்த்தான். படிப்பதற்கு அதில் ஒன்றும் இல்லை என்ற நிலை வந்தவுடன் அதைச் சலிப்போடு கீழே போட்டான். ஆனால், அவ்வப்போது ஆபீஸ் கிளார்க்குகள், "என்னப்பா, இரவு ராணி என்ன சொல்லுகிறாள்" என்று கேட்டவண்ணம் அதை ஒசியில் வாங்கிப் படித்துக் கிழிக்காமல் திருப்பிக் கொடுத்தார்கள். சிவராமன் எப்படியும் திருமணத்திற்குப் போவதில்லை என்ற உறுதிக்கு வந்தவனைப் போலக் காணப்பட்டான். இடையிடையே அவன் தமக்கை சிவராமன் கலியாணத்துக்குப் போக வேண்டிய அவசியத்தைப் பற்றிக் கூறியது அவன் நினைவுக்கு வந்தது. அவன் மனத்தேக்கம் போல வேலையிலும் தேக்கம் இருந்தது. மேஜைமல் குறிப்பேடுகள் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கடுக்காகக் காணப்பட்டன. அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப் படிப்பதும் அதில் எழுத வேண்டிய குறிப்புகளை மெதுவாக எழுதுவதுமாக இருந்தான். திருமணத்திற்குப் போய்விட்டால், தான் எடுத்த கொள்கை என்ன ஆவது? பிறகு மாமனாருக்கு மிக எளிய வனாய்த்தானே ஆக வேண்டும்? பணம் பத்தாயிரம் வந்து சேர வழி என்ன.....? என்று இடையிடையே எண்ணங்கள் தோன்றின. மாலை வந்தது. வேலை முடிந்தது. இடத்தைவிட்டு எழுந்தான். சாரதாவும் தொடர்ந்தாள். ஆபீஸ் பியூனும் கவனித்தான். ஆபீஸ் கதவுகளை அடைத்து மூடுவதில் ஈடுபட்டாலும் அவன் மனம் மட்டும் இவர்கள் உறவை ஆராயத் தொடங்கியது. ஒன்றும் இல்லாமல் இரண்டு பேரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/90&oldid=898306" இலிருந்து மீள்விக்கப்பட்டது