பக்கம்:வழுக்கு நிலம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 87 வைத்தேன் என்று கவனம் இல்லை என்று சொல்லலாமா? இல்லை. உண்மையில் அவர் படும் கடன் தொல்லைக்குக் கொடுத்து விட்டேன் என்று சொல்லலாமா என்று பலவித எண்ணங்கள் அவள் மனதைச் சூழ்ந்தன. 13 "நல்லவர்கள் தாம் உலகில் நன்மை செய்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. தீமை செய்பவர்கட சிலசமயம் பிறர்க்கு நன்மை செய்து விடுகிறார்கள். அந்த ஈட்டிக்காரன் அவருக்காகக் காத்திருக்கவில்லையென்றால் அவர் என்னிடம் அந்த உதவியை எதிர்பார்த்திருக்க வேண்டிய அவசியமில்லை. கெட்டவர்களும் வாழ்க!" என எண்ணுபவள் போல சாரதாவின் மனம் ஈட்டிக்காரனை வாழ்த்தத் தொடங்கிற்று. அதே சமயம் ஈட்டி போல் வாட்டும் அவன் கொடிய போக்கையும் அவன் மனம் கண்டித்தது. அவள் முன்னால் 'டைப்' எந்திரத்தின் கருவிகளை அவள் விரல்கள் ஆட்டி வைத்தன. அவள் கைவிரல்கள் எந்திரம் போலத் தாமாகத் தம் தொழிலைச் செய்து வந்தாலும் அவள் மனம் முழுவதும் அதில் ஈடுபடவில்லை. அவ்வப்போது எந்திரத்தின் அசைவு. ஒயும் போதெல்லாம் அவள் கண்கள் கடைக் கண்ணால் 'அவன்' உள்ளத்தைப் பருக அவாவுவதைப் போல் தாவின. சிவராமனின் சிந்தனையெல்லாம் அன்று வந்த கடிதத்தின் மீது சுற்றிச் சுற்றிச் சென்றது. திருமணத்திற்குப் போவதா வேண்டாமா என்ற கேள்விக்குப் பதில் தேடுவதற் காக அவன் சிந்தனை அந்தக் கடிதத்தோடும் கடந்த கால வாழ்க்கை நிகழ்ச்சிகளோடும் தொடர்பு கொண்டிருந்த வண்ணம் இருந்தது. “மைத்துனன் மாணிக்கம் நல்லவன்தான். அவன் என்னுடன் அன்பு கொண்டவன்தான். நன்றாகத்தான் பழகினோம். அவன் கல்லூரியில் சேர்ந்து படிக்க நானும் எவ்வளவோ உதவினேன். அவர்கள் வீட்டிற்குப் போனாலும் அவன்தானே எனக்கு உற்ற நண்பனாக இருந்தான். அவன் திருமணத்திற்குப் போகாவிடில் நன்றாக இராது" என்று எண்ணியது அவன் மனம். ஆனால். அவன் கடந்த கால வாழ்க்கை நிகழ்ச்சிகள் அவன் எண்ணப் போக்கினின்றும் தடுத்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/89&oldid=898300" இலிருந்து மீள்விக்கப்பட்டது