பக்கம்:வழுக்கு நிலம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 ரா. சீனிவாசன் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பெரிய புத்தகங்கள் சில சிறிய புத்தகங்கள் சில; வெறும் ஏடுகள் சில இப்படிப் பலவாகச் சிதறிக் கிடந்த புத்தகங்களை அடுக்கி வைத்தாள். பிரித்த புடைவை ஒன்றை எடுத்து மடித்து வைத்தாள். அதற்குள் வெளியே போயிருந்த மாணிக்கம் வீட்டிற்குள் வந்தான். அவனுடைய பேச்சு, நடை இவற்றில் சுறுசுறுப்பு அமைந்திருந்தது. அவன் முக்கிய மனிதனாகக் காணப் பட்டான். jo "அப்பா உனக்கு ஏதாவது நகை செய்கிறாரா பார்வதி "இல்லை அண்ணா. அண்ணிக்குச் செய்தால் போதாதா! அவருக்கு இருக்கிற கஷ்டத்திலே செய்ய வேண்டியதெல்லாம் சீராகச்செய்து முடித்தால் அதுவே போதும்." "ஆமாம். எல்லாம் அவளுக்குப் போதும்....? அதனால்தான் இருக்கிற தங்கச் சங்கிலியைக்கூட அங்கேயே வைத்து விட்டாள். எதைப் போட்டுக் கொள்ளப் போகிறாளோ!...” என்றாள் தாய். "ஏன்.? அவருக்கு ஒரு கடிதம் எழுதினால் அவர் கொண்டுவந்து கொடுத்து விடுகிறார்..?" "அவர் வருவதே நிச்சயமில்லையே! மாணிக்கம் நீயாவது ஒரு கடிதம் எழுது வரும்போது தங்கச் சங்கிலி கொண்டு வரச் சொல்லி எழுது." உண்மையைச் சொல்லி விடலாமா என்று துணிந்தாள் பார்வதி. அவசரப்பட்டுப் பயன் இல்லை என்று சும்மா இருந்தாள். "சரி! எழுதுகிறேன். பார்வதி! நீயும் ஒரு கடிதம் எழுது. அதில் தங்கச் சங்கிலியை வரும்போது கொண்டு வரச் சொல்லி எழுது." "சரி, எழுதுகிறேன். நீ அந்த விஷயம் எழுத வேண்டாம். எழுதினால் நன்றாக இருக்காது. கலியாணத்திற்கு வரச் சொல்லி மட்டும் நீ எழுது." "சரி, சரி” என்று சொல்லி அவன் கொண்டுவந்த புதிய 'சூட்டுகளை எடுத்துப் பெட்டியில் அடுக்கி வைக்க ஆரம்பித்தான். இந்தச் சங்கிலிக்கு என்ன பதில் சொல்வது என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். போக்கடித்து விட்டேன் என்று சொன்னால் அவர்கள் நம்ப மாட்டார்கள் எங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/88&oldid=898298" இலிருந்து மீள்விக்கப்பட்டது