பக்கம்:வழுக்கு நிலம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 85 என்ன நியாயம் இருக்கிறது? அண்ணன் யாருக்கும் ஒரு வித தீங்கும் செய்யவில்லையே. மைத்துனன் என்ற உறவு காட்ட வில்லையென்றாலும் பழகிய தோஷத்திற்காகவாவது அவர் கட்டாயம் வந்து தீர வேண்டும். பணம் கொடுக்கவில்லை யென்றால் என்னை அனுப்பி வைத்தது போதாதா? என்னோடு வாழ மாட்டேன் என்று பேசலாம்; அதில் உறுதி யாக இருப்பேன் என்று நெஞ்சு உரம்கொண்டு பேசலாம். அந்த நெஞ்சு உரம் கொள்வது மட்டும் இயற்கையா? வாழ்வைப் பாழாக்கிக் கொள்வதா?" என்று தனக்குத்தானே சிந்திக்கத் தொடங்கினாள். சில பழைய நினைவுகள் வந்து ஏதோ பதில் சொல்வது போல் இருந்தன. "பார்வதி! கதவைத் தாளிட்டுக் கொள். வர நேரமாகும்” என்று சொல்லி நேரம் கழித்து வந்த இரவுகள் அவளுக்குக் கவனம் வர ஆரம்பித்தன. "இதைப்பற்றிக் கேட்க உனக்கு உரிமை கிடையாது. வாழ இங்கே உரிமை இல்லையென்றால் என் வாழ்வைப் பற்றிக் கேட்க உனக்கு யார் உரிமை கொடுத்தது" என்று பலமுறை பதற்றமாகக் கேட்டது கவனத்திற்கு வந்தது. "கட்டிய கணவனைத் தடுத்துக் கேட்க உரிமை இல்லையாம். அத்தகைய வாழ்வு இருந்து என்ன, இல்லாவிட்டால் என்ன என்ற காரணத்தால்தானே நானே அந்த இடத்தை விட்டு வரத் துணிவு கொண்டேன். கணவனின் ஒழுக்கத்தைக் கண்டிக்கும் உரிமை இல்லாமல் மனைவி என்ற பெயர் எனக்கு எப்படி ஏற்கும்? தமிழ் நாட்டில் பிறந்த பெண்ணுக்கு அந்த உரிமைதானே அடிப்படை. வெறும் பணத்தின் தேவைக்காக என்னை அனுப்பிவிட்டார் என்றால் அதை நான் பொறுக்கலாம். இரவு நேரங்களில் அவர் தனிப்பட்ட வாழ்வுக்கு நான் தடையாக இருக்கிறேன் என்ற காரணத்தால் என்னை அனுப்பிவிட்டாரா? சே. இருக்காது. அத்தகைய ஒழுக்கம் அவரிடத்தில் இருக்க முடியாது. பணத்தின் தேவைதான் அவர் குணத்தைக் கெடுத்து விட்டது. மனிதனின் பண்பு சிறக்க வேண்டுமானால் அவனிடத்தில் முதல் தேவையான பணம் இருக்க வேண்டும். பணம்தான் பண்பை வளர்ப்பது. நல்லொழுக்கத்திற்கு வித்தாகும். அன்பு வளரப் பணம் தேவை" என்று அவள் மனம் எண்ண ஆரம்பித்தது. முன்னால் சிதறிக் கிடந்த நகைப் புத்தகங்களை எடுத்து ஒருபுறம் வைத்தாள். அவற்றின் அட்டைகள் கூட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/87&oldid=898296" இலிருந்து மீள்விக்கப்பட்டது