பக்கம்:வழுக்கு நிலம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ரா. சீனிவாசன் அதற்குப் பிறகு யார் கேட்க முடியும்? ஒரே மகள். மருமகன் இட்டதுதானே அந்த வீட்டில் இனிச் சட்டமாக முடியும்..? அவன் நினைத்தால் பிறகு எதையும் செய்யலாம். நாம் செலவு செய்வது இருபதினாயிரம்தானே, பிறகு அவன் ஐம்பதினா யிரத்திற்கு அதிகாரி ஆகிவிடுவானே. இந்தப் பட்டிக்காட்டிலே நம் மகன் காரிலே வந்தால் நமக்குத்தானே பெருமை. ஊரிலே உள்ளவர்கள் எல்லாம் சரியான இடத்திலே சம்பந்தம் செய்து கொண்டோம் என்று பாரட்டினால் பெருமை நமக்குத்தானே? மாணிக்கம் மாணிக்கம்தான். நான் ஒன்றும் வைக்கா விட்டாலும் அவனே எல்லாம் செய்துவிடுவான். பார்வதி என்றால் அவன் அப்படியே உயிர்விட்டு விடுவான்.” "இதெல்லாம் எப்படி விளங்கும் மருமகனுக்கு? நீங்கள் இவ்வாறு இருபதினாயிரம் செலவு செய்கிறீர்கள் என்றால் மருமகனுக்கு மனவருத்தம் ஏற்படாதா? நமக்குக் கொடுப்பதற்கில்லை. மகன் திருமணத்திற்கு மட்டும் வாரி இறைப்பதற்கு இருக்கிறது என்று சீறி விழமாட்டானா?” "என்ன செய்வது. நிதானமாகத்தான் செய்திகளைத் தெரிவிக்க வேண்டும். மைத்துனன் மாணிக்கம் என்றால் அவனுக்கு அளவு கடந்த அன்பாயிற்றே. அவன் நல்வாழ்வு பெறுவதைக் கண்டு அவன் மனம் ஒன்றும் கருகமாட்டான். மாணிக்கமே கடிதம் எழுதினால் கட்டாயம் திருமணத்திற்கு வருவான். அவன் மனமும் ஓரளவு குளிரும்." இந்தப் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டிருந்த பார்வதியின் உள்ளம் குளிர்ந்தது. "அவர், திருமணத்திற்குக் கட்டாயம் வந்தாக வேண்டும். இல்லாவிட்டால் அண்ணன் மனம் புண்படும். எதிர்காலத்தில் அண்ணன் செய்யக்கூடிய உதவி கிடைக்காமல் போய் விட்டாலும் போய்விடும். அண்ணன் மனம் வருத்தப்பட்டால் பிறகு அவரோடு பேசுவது கூட இல்லாமல் போய் விடும். பிறகு என்னுடைய வாழ்வைச் சிந்திக்கப் போகிறவர் யார் இருக்கப் போகிறார்கள்...? இரண்டு பேருக்கும் பகைமை வளர்ந்தால் இடையில் நான்தானே துன்பப்பட வேண்டும்? என்ன இருந்தாலும் அவர் கலியாணத்திற்கு வராமல் இருக்கக்கூடாது. என்றும் பகையை வளர்த்து ஒரு செயலைச் செய்யக் கூடாது. மறுபடியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துத்தானே ஆகவேண்டும்? அதனால் இப்போது ஏற்பட்ட மனக்கசப்பால் வராமல் நின்றுவிடக்கூடாது. அப்பா பணம் கொடுக்கவில்லை யென்றால் அண்ணன் கலியாணத்திற்கு வராமல் இருப்பதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/86&oldid=898294" இலிருந்து மீள்விக்கப்பட்டது